Today Rasi Palan, 2nd June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 2nd June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 2, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சூழ்நிலைகளுக்கு ஏற்ப வினையாற்றுங்கள். இந்த வாரம் உங்கள் செயல்பாடுகளில் அதிக வீரியம் இருக்கும். முடிவுகளும் அதற்கு ஏற்றதாகவே இருக்கும். அடிக்கடி கண்ணீர் வேண்டாம். அதற்கு மதிப்பில்லாமல் போய்விடும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பிரச்சனைகளை விட்டு விலகி ஓடும்எண்ணம் வேண்டாம். பிறகு எதைக் கண்டும் அஞ்சும் சூழல் ஏற்பட்டுவிடும். வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படுவீர்கள். ஆனால், அதற்கு நிறைய வலி அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏனோ...
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கடந்த கால தொல்லைகள் நீங்கி, நம்பிக்கை பிறக்கும் தினம் இன்று. கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்கள் துணை எப்படி இருந்தாலும், நீங்கள் உங்கள் பணியை செய்து கொண்டே இருப்பீர்கள். அதிகாரமிக்கவர்களிடம் இருந்து பிரச்சனைகள் வரும். நீங்கள் அப்போது அமைதியாக இருப்பது தான் ஒரே தீர்வு.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
இன்று உண்மையில் உங்களுக்கு அபாரமான நாள். இமய மலையில் வெற்றிக் கொடி நாட்டியது போன்று உணர்வீர்கள். யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டாம். ஜெயம் உங்களுக்கே.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் தன்னம்பிக்கையை சீர்குலைக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். அதற்காக, உங்கள் எதிராக திட்டமிடல்களை தள்ளிப் போட வேண்டாம். உங்கள் காதலில் சிறு பின்னடைவு ஏற்படும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களால் உங்களுக்கு பயன் கிடைக்கும். கேட்பதை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். சில விஷயங்களில் உங்களுக்கு தெளிவு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த நிலை மாறும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
முக்கியமான பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுங்கள். இவ்வளவு நாட்களாக தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு பயனற்ற முடிவுகளை அளித்து கொண்டிருந்தீர்கள். எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
எதிர்கால திட்டமிடலை நோக்கி உழைப்பீர்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வினையாற்றும் உங்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாள். உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சில சச்சரவுகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நாசூக்காக சொல்லி உங்களுக்கு பிடிக்காதவற்றை தவிருங்கள். பாசிட்டிவான செய்திகள் இன்று உங்களை வந்தடையும். எதையும் தீர ஆலோசித்து முடிவெடுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil