மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமெனில், முதலில் நீங்கள் அதில் மிக வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், மிகப்பெரிய வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். அதில் உங்களால் ஜொலிக்க முடியும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்களின் தன்னம்பிக்கையை இழந்து காணப்படுவீர்கள். ஆனால், அது குறுகிய காலத்திற்கு மட்டுமே. மீண்டும் புத்துயிர் பெற்று விரைந்து முன்னேறுவீர்கள். மந்தமான நாள் இது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இன்று உங்கள் செயலுக்கு பாராட்டு கிடைக்கும் நாள். அதேசமயம், உங்கள் பொறுப்பும், கடமையும் மேலும் அதிகரித்திருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டு உங்களை தாக்கும் நாள். எதேச்சையாக சந்திக்கும் நபர்களால் கூட, சிக்கல்களே உருவாகும். இருப்பினும், அவற்றினை உங்கள் மதியால் வெல்வீர்கள். குறைந்தபட்சம் முயற்சி செய்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மேலே எழும்பி முன்னுக்கு வர வேண்டுமே என்று நினைத்தாலும், உங்களுக்கு எதிராக சில அலைகள் இருக்கும். உங்கள் நண்பர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நிதிநிலைமை இன்று எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் துணையோ அல்லது உங்களது நிறுவனத்திலோ, நீங்கள் வந்து தான் சிக்கலான பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள். பண தேவைக்காக, உங்களது சிந்தனைகள் உங்களை விட ஸ்மார்ட்டாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்களால் உங்களுக்கு பயன் கிடைக்கும். கேட்பதை வைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாம். சில விஷயங்களில் உங்களுக்கு தெளிவு ஏற்படாமல் இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த நிலை மாறும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
முக்கியமான பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுங்கள். இவ்வளவு நாட்களாக தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு பயனற்ற முடிவுகளை அளித்து கொண்டிருந்தீர்கள். எமோஷனல் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் கற்கும் திறன் அதிகரிக்கும். மாணவர்களின் செயல்பாட்டில் நல்ல மாற்றங்கள் தெரியும். ஊடகங்களில் பணியாற்றுவோருக்கு உயர் பதவிகள் கிடைக்கவோ, ஊக்கப் பரிசு போன்றவையோ கிடைக்க வாய்ப்புள்ளது.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெற்றிப் பெற வேண்டுமெனில், உங்கள் பணிகளை எவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் தொடங்குங்கள். அப்படி தாமதப்படுத்தினால், அது உங்கள் பார்ட்னருக்கோ, போட்டியாளருக்கோ சாதகமாக அமையும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் நிதி நிலைமை அபாரமாக இருக்கும். ஆனால், உங்கள் தருணங்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். அப்போது தான் வெற்றியை வசப்படுத்த முடியும். ரொமான்ட்டிகான மூடில் இன்று இருப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
எதிர்கால திட்டமிடலை நோக்கி உழைப்பீர்கள். பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வினையாற்றும் உங்களுக்கு இன்றைய நாள் சுமாரான நாள். உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.