Today Rasi Palan, 2nd September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 2nd September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 2, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கிரகங்களின் சாதகமான பார்வையால், எண்ணிய காரியங்கள் இனிதே ஈடேறும். நடுநிலைத்தன்மையுடன் இருப்பதால் அனைவரின் நன்மதிப்பையும் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பொன்னான நேரம் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். காலவிரயம் செய்யும் நண்பர்களிடம் இருந்து விலகுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
. மற்றவர்களின் கண்களால், நம்முடைய உலகத்தை ரசிக்க முடியாது என்ற கருத்து கொண்டவர்கள் நீங்கள். எதிர்பார்ப்புகளுடன் கூடிய நன்னாள். நிதிநிலவரம் சீராக இருக்கும்
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சந்திரனின் சாதகமான பார்வையால், மகிழத்தக்க நிகழ்வுகள் நடைபெறும். பழைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். பரிசோதனை முயற்சி மேற்கொள்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
தன்கையே தனக்குதவி என்பதை என்றென்றும் மறக்கமாட்டீர்கள். நீண்டநாளாக மனதை குழப்பிவந்த விவகாரங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலரின் பேச்சு உங்களின் மனதை புண்படுத்தும் என்பதால் கவனம். சீக்கிரம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உதிக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தேவையில்லாத விஷயங்களை எண்ணி மனதை குழப்பிக்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவிவினர்களின் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும். சோம்பலை தவிர்ப்பது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
கடினமான விஷயங்களையும் எளிதாக எதிர்கொள்வீர்கள். பிரியமானவர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து ஆதரவு பெருகும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை எந்நேரத்திலும் மறக்கமாட்டீர்கள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற அவநம்பிக்கையே உங்களது பலவீனம். மறப்போம் மன்னிப்போம் என்பதை கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கிரகங்கள் சாதகமான இடங்களில் இருப்பதால், நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். நல்லதோ, கெட்டதோ நம் செய்கைகளிலேயே உள்ளது என்பதை உணர்வீர்கள். எல்லாவற்றிற்கும் முடிவு தன்கைகளிலேயே உள்ளது என்பதை எந்த தருணத்திலும் மறக்கவேண்டாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அகலப்பார்வையை தவிர்க்க வேண்டிய நாள். மற்றவர்களின் ஆலோசனை தக்கநேரத்தில் நற்பலனை தரும். சோம்பலை தவிர்ப்பதனால், அசவுகரியத்தை விரட்டலாம். சிறு சிறு விசயங்களால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும், பணியிடங்களில் திருப்தியான காலநிலை நிலவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
நண்பர்கள் நட்பு பாராட்டுவர். உற்றார் உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். மகிழ்ச்சியான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மனகுழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொழில்முறை விவகாரங்களில் திருப்தியான நிலை நிலவும்.பகற்கனவு பலிக்காது என்பதை உணர்வீர்கள். சோம்பலிருந்து விடுபடுவது நல்லது.