Today Rasi Palan, 30h April 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 30th April 2020: இன்றைய ராசி பலன், ஏப்ரல் 30, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம் என்பதை உணர்வீர்கள். எடுக்கும் முடிவுகளில் தீர்க்கமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். நீண்ட கால திட்டங்கள் தீட்டுவீர்கள். தனித்திறமையால் பாராட்டப்படுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
முன்னுரிமை திட்டங்களுக்கு அதிக மதிப்பு அளிப்பீர்கள். மற்றவர்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடுவீர்கள். சீரியசான விசயங்களிலும் அதிக கவனம் எடுத்து சிறப்புடன் செய்து முடிப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தரும். திட்டமிட்டு செயல்படுவதனால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். நண்பர்களுக்கு உதவுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நிஜத்தை உணர்வீர்கள். தவறுகளை ஏற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பீர்கள். தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழும் வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். தவறுகளிலிருந்து பாடம் கற்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கற்பனை உலகில் மிதப்பீர்கள். தோல்வியடைந்த விசயங்களை மறுஆய்வு செய்வீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
அதிக பணிச்சுமையால் அவதிப்படுவீர்கள். உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். தனித்தன்மை வெளிப்படும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும். உணவு பழக்கவழக்கங்களில் அதிக கவனம் வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அதிக எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கை அதிகரிக்கும்.மகிழ்ச்சியான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இரகசியத்தை பாதுகாப்பீர்கள். உங்களது நடத்தைகள் பாராட்டை பெற்றுத்தரும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
நன்றியுணர்வுடன் இருப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளால் குழப்பமடைவீர்கள். உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்படும். விருந்து, விசேசங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.