Advertisment

Rasi Palan 30th January 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 30th January 2019: பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். ஆளுமை செய்வீர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan today

Rasi Palan today

Rasi Palan Today 30th January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 30th January 2019 : இன்றைய ராசி பலன், 30 ஜனவரி 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நீண்ட காலமாக வெளியில் சுற்றிக் கொண்டிருந்த உங்களது பணம் உங்கள் கைக்கே திரும்பி வரும். குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு உண்டு. உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நாள் இது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குடும்பத்தின் மீதான உங்கள் அக்கறை அதிகரிக்கும். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். பணியிடத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம். மிக மிக எச்சரிக்கை தேவை.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வாழ்க்கை தரம் உயர வழி வகைக் கிடைக்கும். விரக்தி மனப்பான்மை பெருமளவில் விலகும். தொழில் ஏற்றம் இருக்கும். பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிறைய அனுபவ பாடங்களை கற்பீர்கள். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள். அனுபவத்தை ரசிக்க வேண்டிய காலக்கட்டம் இது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பண விரயம் ஏற்படும். இருப்பினும், கையைச் சுடும் அளவிற்கு சறுக்கல் இருக்காது. சமாளிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். அதேசமயம், மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம். கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சாதுர்யமான பேச்சால் வெற்றியை வசப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். ஆளுமை செய்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

குடும்பத்தில் பொறுமையாக செயல்படுங்கள். பணவரவில் சின்ன சிக்கல் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்க தொடங்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment