Rasi Palan 30th January 2021 : ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 30th January 2021: இன்றைய ராசி பலன், ஜனவரி 30, 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : உங்கள் வெற்றியை நோக்கி ஓட வேண்டிய நாள். தோல்விகளை திரும்பிப் பார்க்காமல் முன்னேறிச் செல்லுங்கள். களம் புதிதாக இருந்தாலும் துரிதமாக செயல்படுங்கள். வெற்றி உறுதி. குடும்ப உறவில் மேலும் அக்கறை வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். தொழில்முறை விவகாரங்களில் முன்னேற்றம் நிலவும். நம்பிக்கையே மாற்றத்திற்கு ஆதாரம் என்பதை உணர்வீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21): பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடும். உடல்நலத்தில் கவனம் அவசியம்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : நண்பர்கள் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். அடுத்த 10 நாட்களில் தொழில் விவகாரங்களில் முன்னேற்ற நிலை ஏற்படும். மற்றவர்களுக்காக பொறுப்பு ஏற்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் காரியங்களை தயக்கமின்றி செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களை தரும் என்பதால் எதிர்பார்ப்புகளை தவிர்ப்பீர். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். போட்டி, பந்தயங்களில் பொழுதை கழிப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : அமைதியை மனம் தேடுவதால், மக்களிடமிருந்து விலகியிருப்பீர்கள். சிறு தொலைவு பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : நல்லது எது என்பதை தீர்மானித்து அதில் முழுமுயற்சியை காட்டுவீர்கள். கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : மறதியால் அவதிப்பட நேரிடும் என்பதால், முக்கிய விஷயங்களை குறிப்பெடுத்து வைத்தல் நல்லது. மனச்சிதறலால் அவதிப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : பொழுதுபோக்கு விசயங்களில் அதிக ஆர்வம் கொள்வீர்கள்.அதிக பணிச்சுமைகளால் அவதிப்படுவீர்கள். மற்றவர்களுக்கு பொறுப்பு ஏற்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19): பொதுநலன் குறித்த விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களின் மீது குற்றம் சுமத்தாதீர். நல்லதும் கெட்டதும் நாம் எண்ணுபவைகளிலேயே உள்ளது என்பதை என்றும் மறவாதீர்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : மற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். அசாத்திய நிகழ்வுகளையும் அநாசயமாக செய்து முடிப்பீர்கள். ரியாலிட்டியை உணர்ந்து செயல்படுவீர்கள். பிரியமானவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.