Advertisment

Rasi Palan 30th July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan july 30th: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 30th July 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan july 30th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 30th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 30th July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 30, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு உண்டு. விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் இது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குடும்ப வேலையை அக்கறையுடன் செய்வீர்கள். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வாழ்க்கை தரம் உயர வழி வகை கிடைக்கும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை விலகும். தொழில், வியாபாரம் எண்ணம் போல் இருக்கும். கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

குடும்பத்தில் பொறுமையாக செயல்படுங்கள். பணவரவில் சின்ன சிக்கல் இருக்கும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்க தொடங்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment