Advertisment

Rasi Palan 30th March 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 30th March 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 30th March 2020

Rasi Palan 30th March 2020

Today Rasi Palan, 30th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 30th March 2020: இன்றைய ராசி பலன், மார்ச் 30, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

குடும்ப உறுப்பினர்களிடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். வெட்டி பொழுது போக்குபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. உங்களது நற்செயல்களை சிலர் பரிகாசம் செய்வர்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நினைத்தது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும் என்பதால் மனச்சோர்வு அடைவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள், நீண்டநாளைய விவகாரங்களில் தீர்வு காண முயற்சிப்பீர்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

வாழ்க்கைத்துணைவர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். செய்யும் காரியங்களில் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருப்பீர்கள். நீண்டநாள் நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பீர்களே தவிர, யாரையும் பின்பற்றுபவர்களாக இருக்கமாட்டீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நண்பர்கள், உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். மற்றவர்களின் அறிவுரை தங்களை நல்வழிப்படுத்தும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எடுத்த விசயங்களில் உறுதித்தன்மையுடன் இருப்பீர்கள். மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களது நெருங்கிய நண்பர்களிடம் பொய் சொல்லமுடியாத நிலை ஏற்படும். நண்பர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பீர்கள். எதையும் நேரடியாக களமிறங்கி சாதிக்க முயல்வீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

வரும் காலம் வசந்தகாலம் என்பதை மறந்துவிட வேண்டாம். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் விசயங்களை தயக்கமின்றி செய்து முடிப்பீர்கள். சுய முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

புதன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் சாதகமான பார்வைகளினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், எண்ணங்களை திட்டமிட்டு வகுத்துக்கொள்வீர்கள். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க சிரமப்படுவீர்கள். உறுதியான முடிவுகள் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். அமைதியாக இருப்பதை விரும்புவீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

ஓய்வு தேவைப்படும் நாள். நடக்கும் செயல்கள் உங்களுக்கு எதிர்பாரத அதிர்ச்சியை தரும். அனுபவ அறிவினால் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பழைய தவறுகளிலிருந்து புதிய பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment