scorecardresearch

Rasi Palan 30th October 2020: இன்றைய ராசிபலன்

Rasipalan today, Horoscope Today: உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 30th October 2020: இன்றைய ராசிபலன்

ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 30th October 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 30, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் நினைவுகள், முழுவதுமாக ஆழ்மனதில் இருந்தாலும்கூட உங்கள் நடத்தையில் அசாதாரணமான சக்திவாய்ந்த செல்வாக்கை செலுத்துகின்றன. ஆகவே, நீங்கள் ஒருவரைக் குறை கூறும் அபாயத்தில் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக வேறு ஒருவர் நீண்ட காலத்திற்கு முன்பு செய்த ஒன்றின் காரணத்தினால் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களுக்கு தற்போதைய கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன – ‘ஆம் அல்லது இல்லை’! ‘ஒருவேளை’ விருப்பத் தேர்வுகள் இருந்தால், நீங்கள் இந்த தருணத்தில் பரிசீலிக்கலாம். நீங்கள் பதற்றத்தை நீக்கிவிட வேண்டும். ஆனால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும் மற்றும் தீவிரமான விஷயங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை தவிர்ப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களுக்கு நிதி சம்பந்தமான அதிர்ச்சி ஏற்படுதற்கு சாத்தியம் உள்ளது. இருப்பினும் அது விரும்பத்தகாததாக இருக்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. உண்மையில், நீங்கள் சில ஆடம்பரமான நடவடிக்கைகளுக்கு தயாராக இருந்தால், பற்றாக்குறையை ஒரு அழகான லாபமாக மாற்றலாம். நெருங்கிய உறவில் நீங்கள் பாரட்டுகளைப் பெற வாய்ப்பு உள்ளது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களைப் பற்றிய எல்லா அறிவும் உங்களிடம் இருக்க வேண்டும். வேறு எவரையும் விட சத்தமாக கூச்சலிடுவதன் மூலம் நீங்கள் விரும்புவதைப் பெற முடியும் என்று கற்பனை செய்வது மிகவும் உந்துததலாக இருக்கிறது. மற்றவர்களிடம் மிகவும் கவனமாகவும், அக்கறையுடனும், அனுதாபத்துடனும் இருப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் சொந்த நலன்களை நீங்கள் இரண்டாம்பட்சமாக வைத்திருக்க வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)

இது ஒரு முக்கியமான நாள். அனேகமாக மிகவும் உணர்ச்சிமயமான நாளாக இருக்கும். எந்த உள்நோக்கமும் இல்லாத இடத்தில் குற்றம் சாட்ட ஏராளமானோர் பொறுப்பாக இருப்பார்கள். எனவே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை கவனிக்க வேண்டும். பொது நலனில் பங்களிக்கும் தொண்டு நோக்கத்தில் நீங்கள் தொடர்ந்து செயல்படலாம். அது உங்களுக்கும் நல்லது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், நண்பர்களைக் கேளுங்கள். அவர்கள் புதிராகப் பேசினாலும், அவர்கள் சொல்வதில் ஒருவித உணர்வு இருக்கிறது. நீங்கள் விரும்புவதை தெரிவிக்க நேரம் கொடுத்தால் மட்டுமே நீங்கள் உண்மைகளை மறந்து உள் பொருளைத் தேடலாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

நீங்கள் அமைதி காக்க அதிக முயற்சி எடுக்கலாம். ஆனால், இதுபோன்ற சமயங்களில் நீங்கள் விட்டுக்கொடுத்து மக்களையும் சூழ்நிலைகளையும் இறுதி கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதிப்பது சரியாக இருக்கும். பிறரின் வாக்குறுதிகளை உண்மையில் நம்பலாமா என்பதை நீங்களே கண்டுபிடிப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

உங்கள் நம்பிக்கைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஒன்றிணைந்து வருவதாகத் தெரிகிறது. நீங்கள் அன்பால் மிகவும் உந்துதல் பெற்றவர்கள். நீங்கள் விரும்பியதை சரியாகப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட தூரப் பயணம் கிட்டப் பயணம் இருக்கும். அவை உங்கள் வாழ்க்கையை மாற்றும் உந்துதலை அளிக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நீங்கள் நடைமுறையில் உள்ள மாற்றங்களுக்குள் செயல்பட வேண்டும். நீங்கள் இப்போது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று தோன்றும் சூழ்நிலைக்கு உங்களை வழிநடத்தியுள்ளீர்கள் என்பதை உணர வேண்டும். ஆனால், ஒரு எளிய தர்க்கம் நீங்கள் உள்ளே நுழைந்தால், உங்களை நீங்களே வெளியேற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறது. அதை அடைய முயற்சி செய்யுங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நீங்கள் போட்டியில் சரணடையத் தேவையில்லை. யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள். இருப்பினும், உங்கள் அடையாளம் ஒரு வகைமாதிரியாக இருந்தால், நீங்கள் சரியானதைச் செய்து தொடர்ந்து இருப்பீர்கள். தற்போதைய நிச்சயமற்ற நிலைக்கு நீங்கள் வந்ததும் அந்த முயற்சி மதிப்புக்குரியது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19)

வீட்டுச் செலவுகள், குடும்பச் செலவுகள் உங்கள் அக்கறையைக் கூட்டும். ஆனால், பொதுவாக களியாட்டம் என்பது வாழ்க்கையின் சுமைகளை மறக்க ஒரு வழியை உங்களுக்கு வழங்குகிறது. பயணம் பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு நல்ல வழிமுறையாகவே இருக்கிறது. ஆனால், அது உடல் ரீதியான பயணம் என்பதைவிட நீங்கள் தொடங்கும் உணர்ச்சிபூர்வமான பயணமாகவும் இருக்கலாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நீங்கள் உங்களுடைய நிதி நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நீங்கள் மிக விரைவில் ஒரு நம்பிக்கைக்குரிய சலுகையைப் பெறுவீர்கள். ஆனால், அனைத்தும் பார்க்கக் கூடியது அல்ல. இதில், எல்லா விஷயங்களிலும், ஒவ்வொரு நுணுக்கத்தையும் நீங்கள் புரிந்து கொள்ளும் வரை ஒரு சிறிய தடத்தையும் மீண்டும் மீண்டும் ஆராய வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan 30th october 2020