Today Rasi Palan, 30th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 30th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 30, 2020 :
மேஷம் ( மார்ச் 21 - ஏப்ரல் 20) : உங்களுடன் சற்று மனம் விட்டு பேச நினைப்பவர்களுடன் நேரம் ஒதுக்க மனமில்லாதாவராக உள்ளீர்கள். இழந்த வாய்ப்புகள் மீண்டும் உங்களுக்கு திரும்பி வருவதினால் நீங்கள் பறக்க நினைக்க விரும்புகீறிர்கள். இருப்பினும், நீங்கள் இதுவரை கருத்தில் கொள்ளாத விசயங்களையும் இனி யோசித்து பாருங்கள். சந்தித்து பாருங்கள்.
ரிஷபம் ( ஏப்ரல் 21 - மே 21) : இன்றைய சில நிகழ்வுகள் விளக்க முடியாதவையாக இருக்கலாம். உங்களுக்கும் சில குழப்பங்கள் ஏற்படும். சற்று தனிமையில் (அ) உறவினர்களுடன் கலந்துரையாடினால் மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் ஆச்சரியப்படுத்துவீர்கள் என்பதில் யாரும் சந்தேகம் வேண்டாம்.
மிதுனம் (மே 22 - ஜூன் 21) : உங்கள் வாழ்வில் ஏதோ குறிப்பிட்ட சில விசயங்களை இழந்தவர் போல் காணப்படுகிறீர்கள். எனவே, உங்கள் கவனத்தை ஈர்த்த, உள்ளார்ந்த கேள்விகள் எழுப்பிய சில விசயங்களை நோக்கி நகர்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23 ) : வாழ்க்கை என்பது பலதரப்பட்ட அம்சங்களாகும். தனிமையில் இருந்து மீண்டு, மீண்டும் அந்த பல புன்னகையை கொண்டு வர மாற்று சிந்தனையும், வாழ்க்கை முறையும் கொஞ்சம் தேவைப்படுகிறது.
சிம்மம் ( ஜூலை 24 – ஆகஸ்ட் 23 ): வாழ்கையில் அனைத்து வகையான மக்களை பற்றி புரிந்து கொள்ளுங்கள். மாற்றுக் கருத்து கொண்ட மக்களோடு உங்களின் உறவை மேம்படுத்த முயற்சி எடுப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23 ) : வரும் வாரங்களில் குடும்பம் மற்றும் தொழில் வாழ்கையில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்படும். இதற்கு காரணம், உங்கள் பலவீனம் அல்ல. ஏகப்பட்ட வாய்ப்புகள் உங்களுக்கு உருவாக இருக்கின்றன. வெற்றிகள் பல வழிகளில் கிடைக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23 ) : நீங்கள் உற்சாகப்பட/ பிறரை உற்சாகப்படுத்த தயாராகி விட்டீர்கள். நீண்ட நாட்களாக தள்ளி வைக்கப்பட்ட/ ரத்து செய்யப்பட்ட உல்லாசப் பயணம் (அல்லது நண்பர்கள் உடனான முக்கிய சந்திப்பு) விரைவில் நடக்க இருக்கின்றன.
விருச்சகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22 ) : உறுதியோடும் , யதார்த்தமாகவும் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். எதையும் அதிகமாக பிறரிடம் வெளிபடுத்த வேண்டாம். நீங்கள், நீங்களாகவே இருக்கலாம். மற்றவர்கள் உங்களுடன் உடன்பட மாட்டார்கள் என்றாலும், உங்களை அவர்களால் நேரடியாக எதிர்க்க முடியாது . உங்கள் முடிவுகளை அவர்கள் புன்னகைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தனுசு (நவம்பர் 23 – ஜனவரி 20 ): கடந்த காலங்களில் பணத்தை விரையமாக்கும் போக்கு உங்களிடம் இருந்தது. ஆனால், தற்போது பணத்தின் மதிப்பு உங்களுக்கு புரியத் தொடங்கியிருக்கும். எதிலும், தேவையற்ற மனநிறைவு கொள்ள வேண்டாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20 ): நீங்கள் மறைமுகமாக பாதுக்காத்து வைத்திருக்கும் நீண்ட கால ரகசியங்களை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற தெளிவற்ற நிலை உங்களிடம் இருந்து வருகிறது. உண்மையில், இது தேவையில்லை. உங்களை கொண்டாடவே அனைவரும் விரும்புகின்றனர். உங்களது ரகசியங்கள், எப்போது விமர்சனங்களாக உருவாகாது.
கும்பம் ( ஜனவரி 21 – பிப்ரவரி 19 ): அடுத்த சில மாதங்களில் எதற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பீர்கள். எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டீர்கள். இருப்பினும், உங்கள் அன்புக்குரியவர்களை இனிமையாக வைத்திருக்க விரும்பினால், நீங்கள் அவர்களுக்கு சில ஆறுதல்களை வழங்கித் தான் ஆக வேண்டும்.
மீனம் ( பிப்ரவரி 20 – மார்ச் 20 ): உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வாழ்க்கையை விடப் பெரியது என்று நீங்கள் உணர்ந்தால், அது ரிதான். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான ஒரு வாய்ப்பு உங்களுக்கு ஏற்பட இருக்கிறது: தான் மறைத்து வைத்த சிரிப்பை நண்பர் ஒருவர் விரைவில் உங்களிடம் காண்பிக்க உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.