Today Rasi Palan, 31st August 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 31st August 2019: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 31, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்கள் இலக்கு என்னவென்று தெரியாமலோ அல்லது அதை விட்டுவிட்டோ வேறு திசையில் பயணித்துக் கொண்டு இருப்பீர்கள். இதனால், உங்கள் ஆற்றல் தான் வீணாகும். சுமாரான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கற்றலில் உள்ள சிரமம் அகலும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். அவசர பயணங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. கடன் தொல்லை குறையும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களுக்கான கடைசி வாய்ப்பு இதுதான். தவற விட்டுவிடாதீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை பேசித் தீர்க்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியம் சற்று பாதிக்கும். சுமாரான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எதிர்காலம் குறித்து தீர்க்கமாக யோசிப்பீர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு, எதிர்காலம் குறித்து தீர்க்கமாக யோசிப்பீர்கள். பெற்றோர்கள் உங்களை நினைத்து நிம்மதி அடைவார்கள். முன்னேற்றமான நாள் இது. ஆனால், செலவு செய்வதில் கவனத்துடன் இருங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்கள் வழியில் புயல் மாதிரி வேகமாக நீங்கள் சென்றுக் கொண்டிருப்பது எல்லாம் ஓகே தான். ஆனால், அதற்காக மற்றவர்கள் சொல்லும், சிறு சிறு ஆலோசனைகளைக் கூட கேட்காமல் இருக்க வேண்டாமே. வெற்றிகரமான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உங்கள் பாதையை நோக்கி மெதுவாக முன்னேறுவீர்கள். சில செயல்களால் உங்களின் நற்பெயர் பாதிக்கும். ஆனால், அதனை நினைத்து வருந்தத் தேவையில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று எண்ண வேண்டாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
அருகில் இருப்பவர்களை கூட நம்ப மாட்டீர்கள். அது சில சமயம் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், அதனால் சில உறவுகளை இழப்பீர்கள். உங்களுக்கு தேவையானவற்றில் குறியாக இருப்பீர்கள். அதனால், உங்களுக்கு ஏற்றம் தான்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நீதிமன்றத்தில் பல நாட்கள் இழுத்துக் கொண்டிருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். இதனால், மன நிம்மதி கிடைக்கும். தெளிவான முடிவுகளை நோக்கி குடும்பத்தை நகர்த்திச் செல்வீர்கள். சில சமயங்களில், உணவு விஷயங்களில் பணத்தை வீணடிப்பீர்கள். அதிலும் கவனம் இருந்தால் உங்களுக்கு சிறப்பு.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
விளையாட்டுத் துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அனுசரித்து செல்வதால் உங்களுக்கே லாபம். அமைதி பல இடங்களில் உங்களை பாதுகாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
சில பேர் மீது அதீத அன்பு செலுத்துவீர்கள். அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியலாம். வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. நேர்மையாக இருப்பீர்கள். உங்களுடைய நற்குணங்களால் பணவரவு சிறப்பாக இருக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
குடும்பத்தின் உள்கட்டமைப்புகளை வலிமையாக்க முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களின் முடிவுகளில் மற்றவர்கள் தலையிட எக்காரணம் முன்னிட்டும் அனுமதிக்க வேண்டாம். அதனால், உங்களுக்கு நஷ்டமே கிடைக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
காதலர்களுக்கு இனிமையான நாள். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான நேரத்தை தயவு செய்து வீணடிக்காதீர்கள்.