Advertisment

Rasi Palan 31st December 2018: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 31st December 2018 in Tamil - பொறுப்பில் உள்ள பணிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடாமல் உடனே முடிக்க முயற்சி செய்யுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 31st December 2018: இன்றைய ராசிபலன்

Rasi Palan 31st December 2018: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 31st December 2018 in Tamil : இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் இயற்கையின் சக்திக்கு உட்பட்டதே.  அதில் மனித இனமே அதிகளவில் ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. வானிலை சாஸ்திரம், ஜோதிடம், ஜாதகம் என்று அவன் கண்டுபிடித்த ஆச்சர்யங்கள் பல. நமது தமிழ்.இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம், உங்களுடைய தின பலனை தெரிந்து கொள்ளலாம். இன்று உங்களுக்கான ராசிபலன் இதோ,

Rasi Palan 31st December 2018 : இன்றைய ராசி பலன், 31 டிசம்பர் 2018

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்கள் நேர்மையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டீர்கள். உங்களை பெரியளவில் குழப்ப உங்களைச் சுற்றியிருப்பவர்களே காத்திருப்பார்கள். மிகவும் உஷாராக இருக்க வேண்டிய தருணம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்க்கையில் இப்போது முக்கியமாகிறது. இன்று சில சவாலான பணிகளை நீங்கள் எதிர்கொள்வீர்கள். ஆனால், முடிவில் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நிதிநிலைமை மோசமாக இருக்கும். எவ்வளவு விழிப்பாக இருந்தாலும், கையை விட்டு பணம் கரைவதை உங்களால் தடுக்க முடியாது. உடல்நிலையில் அக்கறை வேண்டும். அமைதியுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சில எதிர்பாராத திருப்பங்கள் உங்கள் வாழ்வை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்திச் சொல்லும். அது உங்கள் தினத்தை மேலும் ஒளிமயமாக்கும். தேவையில்லாத சில விஷயங்கள் உங்களை விட்டு அதுவாகவே அகலும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

இன்று கடினமான நாள். கடினமான வாய்ப்புகள் உங்களை மெருகேற்றும். ஆனால், அந்த கடினமான வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில் தான் உங்களிடம் சிக்கல். நிம்மதி இல்லாவிட்டாலும் துன்பம் இருக்காது.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

மீண்டும் சிறப்பாக செயல்படத் துவங்குவீர்கள். உங்களது பணியைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். ஆனால், எதற்காக உழைக்கிறோம் எனபதை மனதில்  ஓட்டிப்பார்த்தல் அவசியம். கிரக நிலைகள் உங்களுக்கு ஓரளவிற்கு சாதகமான பலனைத் தரும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்களின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டாம். முடிவுகளை சுயமாக எடுக்கப் பழகுங்கள். ஆதாயம் குறைவாக இருந்தாலும், நிதி நெருக்கடி இருக்காது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிடுவீர்கள். அதில், உங்கள் சுமைகளை மறந்து போவீர்கள். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு சுற்றி இருப்பவர்களை மகிழ்விப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பொறுப்பில் உள்ள பணிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடாமல் உடனே முடிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களது நிதிநிலைமையை சரி செய்ய உதவும். இல்லையெனில், வீண் சங்கடங்கள் வந்து சேரும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெற்றி உங்களை சூழும் நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். பணியிடத்தில் ஆதிக்கம் செலுத்துவீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி வீச காத்திருக்கிறது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நீங்கள் பணி செய்யும் இடங்களில், உங்களை தொந்தரவு செய்யும், உங்களை எரிச்சல் அடையச் செய்யும் நபர்களை சந்திக்க நேரிடும். அதனை தவிர்க்க முயலுங்கள். முயன்றால், விலகிச் செல்லுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சில சிக்கல்கள் குறுக்கிட்டாலும், பாதிப்பு பெரிதாக இருக்காது. பலவிதமான தொல்லைகள் உங்களின் நிம்மதியை கேள்விக்குறியாக்கலாம். ஆனால், கிரக அமைப்பு உங்களை பாதுகாக்கிறது. விநாயகர் வழிபாடு அவசியம்.

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment