Rasi Palan 31st January 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 31st January 2019: பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் விவாதங்கள் வேண்டாம்

Rasi Palan Today 31st January 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 31st January 2019 : இன்றைய ராசி பலன், 31 ஜனவரி 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மற்ற வேலைகளில் நேரத்தை செலவிட வேண்டாம். உங்கள் பணி என்னவோ அதை மட்டும் பாருங்கள். குடும்பங்களுடன் அதிகம் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

முருகனின் வழிபாட்டுடன் இன்றைய தினத்தை தொடங்குங்கள். வருகின்ற ஆபத்து நீங்கும். வேலை செய்யும் இடத்தில் சில தொந்தரவுகள் இருந்தாலும், நிதானத்தை இழந்துவிட வேண்டாம். மாணவர்களை பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மனம் லேசாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருந்த பாரம் குறைந்திருக்கும். இன்றைய நாள் உங்களுக்கான நாளாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

குடும்ப உறவில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சனை, சங்கடங்கள் முடிவுக்கு வரும். மௌனம் எல்லா நேரத்திலும் உங்களுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தராது. விட்டு உடைத்து பேசுங்கள். முன்னேற்றமான நாள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வெற்றிகரமான நாள் இது. பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். காதல், திருமணம் தித்திப்பாக இருக்கும். பல நாட்கள் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகள் முடிவு பெறும். நல்ல வேலை வாய்ப்புகள் கிட்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை. பணி மாறுதல்கள் ஏற்படும் சூழல் உள்ளது. வெளியூர் செல்லும் அமைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் போக வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். கணவன்-மனைவி உறவில் உரசல் உண்டாக வாய்ப்புள்ளது. காதலில் பிரிவுகள் உண்டாகலாம். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் விவாதங்கள் வேண்டாம். சலசலப்புகள் உங்கள் ஏற்றத்தை தடுக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

திறமையாக வேலை செய்தாலும், திருப்தி இல்லாமல் இருப்பீர்கள். கிரக நிலைகளே அதற்கு காரணம். உணவில் கட்டுப்பாடு தேவை. மற்றவர்களை ஏளனமாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏமாற்றமான நாள் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சிறப்பான நாள் இது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் பிரதிபலன் உண்டு. வெற்றியாக அமையாவிட்டாலும் தோல்வி ஏற்படாது. நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பொழுதுபோக்கில் நாட்டம் செலுத்துவீர்கள். விஷயவாதி நீங்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

அரசு பணியில் இருப்போருக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. மகிழ்ச்சியான நாள் இது. பணவரவு சிறப்பாக இருக்கும். மல்லுக்கட்டிய நபர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அது உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உங்கள் கௌரவம் உயரும். யாருக்காகவும் உங்கள் உரிமைகளை வீட்டுக் கொடுக்க மாட்டீர்கள். அப்படியே இருங்கள். உங்களுக்கு அதுதான் நல்லது. திட்டமிட்டு செலவு செய்ய முயற்சி செய்யுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பண வரவு அமோகமாக இருக்கும். இதனால், கடன் குறையும். வியாபாரம் செழிக்கும். மனம் நிறையும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். எப்போதும் ஒரு சிந்தனையோடே உலவுவீர்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Horoscope news in Tamil.

×Close
×Close