By: WebDesk
Updated: January 31, 2020, 12:30:30 AM
Rasi Palan 31st January 2020: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 31st January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 31st January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 31, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
இன்றைய நாள்
சந்திரனின் சக்கரம் தற்போது உச்சத்தை தொட்டிருக்கிறது. இதன்மூலம் ஆதாயமடையும் சிலர் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க முயற்சிப்பார்கள். யார் மீது நாம் அக்கறை கொள்கிறோமோ, அவர்கள் நம் மீதும் உணர்வுப்பூர்மாக ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உங்கள் தவறுகளுக்கு பரிகாரம் தேடுவீர்கள். பிறகு கடின உழைப்பை கொடுப்பீர்கள். கடந்த சில வாரங்களாக உங்களைச் சுற்றி வந்த இன்னல்கள் அகலும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பல மர்மங்கள் உங்களைச் சுற்றி நிகழும். சில நேரங்களில் விலைமதிப்பற்றதை நீங்கள் இழக்க நேரிடும். நண்பர்கள் உங்கள் ரகசியத்தை வெளியிட நேரிடும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கும் சூழல் உருவாகும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மனைவியின் அன்பான வார்த்தைகள் உங்களை உற்சாகப்படுத்தும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உடல்நலத்தில் அக்கறை தேவை. உடல் சார்ந்த உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விநாயகரை இன்று வழிபடுங்கள். மென்பொருள் தொடர்பான பணி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உடலை ஒருமுறை முழுவதும் பரிசோதனை செய்துவிடுங்கள். சில மருத்துவ செலவுகள் ஏற்படும் முன்னரே, அதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறியளவு பிரச்சனை வந்து போகும். சுமாரான நாள் உங்களுக்கு.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கிரக அமைப்பு நிலைப்படி, இன்று தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
புரமோஷனுக்கு வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளுடன் நல்ல பெயரை பெறுவீர்கள். யாரையும் புண்படுத்த தெரியாத உங்களுக்கு வெற்றி தேடி வரும். இன்பமான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சிலரை புரிந்து கொள்வது மிகக் கடினம். இன்றைய நாள் உங்களுக்கு அப்படியானதாக இருக்கப் போகிறது. எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று தெரியாத அளவிற்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள். இருப்பினும், வண்டியில் வெளியே செல்லும் போதும், பர்ஸை பாக்கெட்டில் வைக்கும் போதும் கவனம் தேவை.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக குறித்த நேரத்திற்கு முன் முடிப்பீர்கள். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யம் அளவிற்கு பணப்புழக்கம் காணப்படும். உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
வாழ்வில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தும். குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். இறைவழிபாடு மற்றும் சிறப்பான திட்டம் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்றைய நாள் அமைதியாக இருக்க பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் பதார்த்தங்கள் தவிர்ப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டால் தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.