/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1379.jpg)
Rasi Palan 31st July: இன்றைய ராசிபலன்
Today Rasi Palan, 31st July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 31st July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 31, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நீண்ட கால திட்டங்களுக்கான இறுதி முடிவை எடுக்க வேண்டியது அவசியம். ரொமான்ட்டிக்கான ஆஃபர் ஒன்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். சகல வசதியுடன் கூடிய நாள் இது இல்லை என்றாலும், நினைத்ததை முடிப்பவனாய் இன்று செயல்படுவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடந்த மாதம் இதே காலக்கட்டத்தில் என்னென்ன சிக்கல்களை சந்தித்தீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். திட்டங்களுக்கு பிறகு உள்ள செயல்பாடுகளை கவனமுடன் ஆராயுங்கள். வேறு வரிகளில் சொல்ல வேண்டுமெனில், உங்கள் தனிப்பட்ட காரணங்களை இப்போதே களையுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நீங்களாக தேடிச் சென்று எந்த சிக்கல்களையும் தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம். அதேசமயம், நண்பர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்களின் ஆலோசனையும், அறிவுரையும் செழுமைப்படுத்தும். உங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
சமூகம் சார்ந்த நட்சத்திரம் வலிமையாக இருக்கும். திட்டங்களை சிறப்பாக செயலாற்றுவீர்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருக்கும். கடினமான பொறுப்புகளையும் சிரத்தை எடுத்து செய்து முடிப்பீர்கள். நூறு சதவிகிதம் அதற்கான கிரெடிட் கிடைக்கவில்லை என்றாலும், 90 சதவிகிதமாவது நற்பெயர் பெறுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
சில காரணங்களுக்காக உங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் சறுக்கலை சந்திப்பீர்கள். இதனால், பொறுப்புகளை திறம்பட செயலாற்றுவேன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள். அதேசமயம், உங்களைத் தவிர பணிகளை சிறப்பாக செய்பவர்களும் இருக்க முடியாது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சூரிய தனது நிலையை மாற்றிக் கொள்வதால், முன்னேறிச் செல்ல நீங்களே உங்களை உந்தித் தள்ள வேண்டும். சில நாட்களுக்கு உங்களுக்கு சறுக்கல் இருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் சிறகினில் நீங்கள் பறந்தால் தான் நல்லது!.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
சோம்பேறித்தனத்தில் இருந்தும், பொறுப்பற்ற தனத்தில் இருந்தும் விடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். உங்களின் வீழ்ச்சிக்கு அதுவே காரணம். நிதானமாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதற்காக, உங்களுக்கான வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
சில திடீர் சந்திப்புகள், உங்களின் வாழ்க்கையை மாற்றும். உங்கள் திட்டங்களை மாற்றும். நீங்கள் எடுக்கும் முடிவே உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும். ஆனால், தவறான ஆலோசனைகளை புறந்தள்ளுங்கள். நண்பர்களில் கருப்பு ஆடுகளை கண்டறிய பழகுங்கள். இல்லையெனில், உங்கள் வெற்றி பாதிக்கும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் கனவுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளுங்கள். ஆனால், தவறான பாதையை தூக்கி எறியுங்கள். கடினமான தருணங்களில் இருந்து உங்கள் தலையை சற்று மறைத்தே வையுங்கள். அமைதியாக, நிதானமாக பணியை மேற்கொள்ளுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதிநிலை நேற்றைவிட, இன்று சற்று மோலோங்கி இருக்கும். உங்கள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வீர்கள். நண்பர்களின் உதவியால் பலன்கள் கிடைக்கும். தூக்கம் இல்லாமல் அவதிப்படுவீர்கள். நெருங்கிய இழப்பு ஒன்று உங்களை வாட்டும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
அடுத்தவர்கள் உங்களைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என நினைத்து வருத்தப்பட வேண்டாம். நீங்கள் அவர்களை விட புத்திசாலிகள் என்பதை மறக்க வேண்டாம். நிதிநிலைமை ஏற்றமுடன் இருக்கும். கணவன், மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
எதிரிகளை கவனமாக கையாளுங்கள். அங்கீகாரம் கிடைக்க தாமதமானாலும், இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி. உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கடுமையான முதுகுவலியால் அவதிப்படுவீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.