Rasi Palan Today 3rd April 2019 in Tamil: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 3rd April 2019 : இன்றைய ராசி பலன், ஏப்ரல் 3, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தை நோக்கி நகரப் போகிறீர்கள். அது எவ்வளவு கடினமாக இருக்கப் போகிறது என்பது தான் சஸ்பென்ஸ். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது குறித்தே உங்களது எண்ணம் இருக்கும். குழந்தைகளிடம் பழகுவதில் கூட தயக்கம் காட்டுவீர்கள். வெளிப்படையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதி நிலைமை தள்ளாட்டத்தோடு இருக்கும். இவ்வளவு நாள் என்ன முறையைப் பின்பற்றி செலவு செய்தீர்களோ, அப்படியே கண்டினியூ பண்ணுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டும். தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
ஒவ்வொரு முறையும் நூழிலையில் அதிர்ஷ்டம் உங்களைக் காப்பாற்றி கரை சேர்க்கும். மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் நேரமிது. ஆகையால், எப்போது மைண்ட்டை க்ளீயராக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மோசமான கனவுகளை நோக்கி கவலைப்பட வேண்டாம். அதனை தகர்த்தெறிய முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு வெற்றியும் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல பெயரைப் பெறுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தான்தோன்றித்தனமாக செலவு செய்வதை தவிர்ப்பது உங்களுக்கும் நல்லது, குடும்பத்துக்கும் நல்லது. தீர ஆராயாமல் எந்த முடிவுக்கும் வராதீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குழந்தை பாக்யம் உண்டாகும். பல நாள் காத்திருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடனடியாக மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும், நீங்கள் விரும்பியவை நடக்கும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நீங்கள் எங்கு வேலைப் பார்த்தாலும், அங்கு ஆதிக்கம் செலுத்துவீர்கள். ஆதிக்கமும் செலுத்துவீர்கள். ஆனால், அதனால் சில எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பார்ப்பதற்கு பசு போல இருந்தாலும், புலியைப் போல் பாய்வீர்கள். உங்களை ஒரு குறைச் சொன்னால், சொன்னவர் அடுத்த முறை உங்களை தேடி வந்து பாராட்ட வைப்பீர்கள். வைராக்கியம் நிறைந்த உங்களுக்கு இன்றைய தினம் மேலும் ஒரு வெற்றியை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
கலவையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்கள். உங்கள் தடுமாற்றத்திற்கு அதுவும் ஒரு காரணம், புரிந்து கொள்ளுங்கள். கற்றதை பயனுள்ளவாறு பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயமாகும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சரிசமமான விகிதத்தில் ஏற்ற, இறக்கங்களை காண்பீர்கள். அது கற்றுத் தரும் பாடம், உங்களை கூர்மையாக்கும். மேம்படையச் செய்யும். செல்லும் இடங்களில் இனி வெற்றியை குவிப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெளிநாடுச் செல்லும் சூழல் உருவாகும். அதனை சாதகமாக்கிக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். கணிசமான அளவில் உங்கள் நிதிநிலைமை உயரும். சுமாரான நாள் இது.