Advertisment

Rasi Palan 3rd June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 3rd June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 3rd June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 3rd June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 3rd June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 3rd June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 3, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கிரக நிலைகளின் செயல்பாடுகளால் உங்களது சில உறவுகளின் அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். அடுத்தவர்கள் உங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கடவுள் வழிபாட்டுடன் இன்றைய நாளை துவக்குவது பயன் அளிக்கும். அளவுக்கு அதிகமான நம்பிக்கை, எதிராக அமையலாம். இரும்பு தொழில் செய்பவர்களுக்கு இன்று அனுகூலமான நாள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களை நம்பாமல் உங்களை நம்ப வேண்டிய நேரமிது. உங்கள் தொழில் பார்ட்னர்கள் கூட உங்களுக்கு உதவுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்கள் கைகளே உங்களுக்கு உதவி.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது. உங்கள் பணியிடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வினையாற்றுவதற்கு முன்பு யோசித்து செயல்படுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு உண்டு. விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் நல்ல பல சலுகைகள் கிடைக்கும். மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய தருணம் இது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குடும்ப வேலையை அக்கறையுடன் செய்வீர்கள். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள். மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment