Today Rasi Palan, 3rd June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 3rd June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 3, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
தேடல்கள் இல்லாமல் எதுவும் இல்லை. உங்களின் தேடலே உங்களது வெற்றியை உறுதி செய்யும். வெற்றியை பகிர்ந்து கொண்டாடுங்கள். வீட்டிலேயே இருப்பது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால், இதில் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் விலைமதிப்பற்றது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
தடுமாற்றம் இயற்கை தானே. அதை கேஷுவலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஆராயக் கூடாது. நேர்மறை சிந்தனைகள் உங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்லும். பெற்றோர்களின் ஆசி பெறுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சிந்தனை உங்களின் தரம் உயர்த்தும். திட்டம் போட்டு பகுப்பாய்வு செய்து நீங்கள் வினையாற்றும் செயல் வெற்றியை வசப்படுத்தும். சிரிப்பின் மூலம் மற்றவர்களை கவரும் மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஏறுமுகமே.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மனைவியின் அன்பைப் பெறுவீர்கள். இடர்பாடுகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். பயமிருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சாதிப்பீர்கள். எங்கு சென்றாலும் உச்சமாய் இருக்க வேண்டும் என்று எண்ணும் கடக ராசி நேயர்களுக்கு வெற்றி மகள் காத்திருக்கிறாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உங்களுக்கான நாள் இது. விடை தெரியாமல் இருந்த பல தருணங்கள் மீது இன்று வெளிச்சம் பாயவிருக்கிறது. அது உங்களை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். யாராக இருந்தாலும், காத்திருக்க சொல்லிவிட்டு உங்களுக்கான தருணங்களை அனுபவியுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தள்ளிபோய்க் கொண்டிருந்த திருமண அம்சம் விரைவில் கைக்கூடும். கவலை வேண்டாம். உங்களுக்கு திருமண திசை இப்போது இருக்கிறது. அதேபோல், காதலும் கைக்கூடும். துணிந்து காதல் சொல்லுங்கள். ஆல் தி பெஸ்ட்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
துன்பங்களுக்கு சற்று விடை கொடுங்கள். அவை ரெஸ்ட் எடுக்கட்டும். இன்பங்களை இன்று ருசித்துப் பார்ப்பீர்கள். உங்கள் துணையின் வழியே. இன்றைய நாளுக்கான இன்பம் தொடங்கும். உடல் நலத்தில் மட்டும் சிறிது அக்கறை காட்டுங்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
யாருக்காவும், எதற்காகவும் உங்கள் முடிவுகளில் இருந்து பின் வாங்காதீர்கள். அது நிச்சயம் உங்களின் தரத்தை அசைத்துப் பார்க்கும். வீண் விவாதங்கள் வேண்டாம் நண்பர்களே. நேரத்தை வீண் செய்யாதீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
மகிழ்ச்சிகரமான நாள். வெற்றி உங்களைத் தேடி வரும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகும். சேமிப்பு கை கொடுக்கும். காதல் கைகூடும். குடும்ப உறவில் நிம்மதி நிலவும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பணிச் சூழல் சவால்கள் நிரம்பியதாக இருக்கும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். வேலை இழப்பிற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. பாதுகாப்பின்மை உணர்வு மேலோங்கி இருக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. ஏற்ற இறக்கங்களை காண்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இன்று தானம் செய்யுங்கள். புண்ணியங்கள் உங்களைத் தேடி வரும். ஆஞ்சநேயரை வழிபடுவது உங்கள் முன் நிற்கும் தடைகளை தகர்க்கும். காதல் கைக்கூடும் வாய்ப்பு உள்ளது. இளகிய மனம் கொண்ட நீங்கள் கனிவான பேச்சுகளுக்கு ஏமாறக் கூடாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil