Rasi Palan Today 3rd November 2018 in Tamil : கேட்பதை வைத்து எதையும் நம்ப முடியாது. பார்ப்பதை வைத்தும் எதையும் நம்ப முடியாது. பேசுவதை வைத்தும் நம்ப முடியாது. அந்த இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம். அவனே நம்பிக்கை. அவனை எல்லை.
Rasi Palan 3rd November 2018 : இன்றைய ராசி பலன், 3 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உறவுக்காரர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும். மரியாதை கொடுக்க பழகுங்கள். வாழ்கையை அதன் போக்கிற்கு விடாமல், கொஞ்சம் இழுத்துப் பிடியுங்கள். தனிப்பட்ட உறவுகளின் பிணைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கிரகங்கள் இன்று உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். உங்களுக்கு பிடித்த பழக்கங்களை செய்யுங்கள். ஏனெனில், அவைதான் இன்று உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்கள் பொழுதுபோக்குகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து, வேலையில் நாட்டம் செலுத்துங்கள். எதிர்பாராத திருப்பங்கள் வந்து சேரும் நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களில் இருக்கும் மன அழுத்தங்களை வெளிக்கொணரும் நேரம் இது. மற்றவர்களிடம் கடினமான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது எமோஷனல் வெளிப்பாடு அதிகம் இருக்க வேண்டிய நாள் இது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
எச்சரிக்கை மணி அடிக்கும் போதே உஷாரவது தான் உத்தமம். உங்கள் கனவுகளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் அறியுங்கள். கவனமாக சூழ்நிலைகளை கையாளுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
எல்லாமே கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறதா? தெரிகிறது. ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதிநிலை உங்கள் கையை கடிக்கும். ஆனால், அதையும் மீறி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டியது உங்கள் கைகளில் தான் உள்ளது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்களை சுற்றி உலவும் பாசிட்டிவ் விஷயங்கள், உங்களை பிரகாசமாக வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு அழகாக தெரியும். நல்ல முடிவுகள் எடுப்பதற்கு நீங்கள் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நல்ல நேரத்திற்காக காத்திருக்க நேரிடும். காதல் கைகூடும். ஆனால், கவனம் தேவை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, நல்ல வாழ்வை தொலைக்க வேண்டாம். தொலைந்தால் மீண்டும் வராது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சிறிய விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட சிக்கல்களை நண்பர்களுடனோ, துணையுடனோ பகிர்ந்து கவலையை விட்டு விலகுங்கள். உங்களால் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
வெற்றிகரமான நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். உங்களின் திடமான மனநிலை சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சமூகம் சார்ந்த சூழல்களில் உங்கள் முகமும் தென்படும். இயற்கையான சூழலை நேசிப்பீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பணம் தொடர்பான சிக்கல்கள் தீரும். ஆனால், சில பண விவகாரங்களில் முடிவு எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். கவனச் சிதறல்கள் நீங்கும்.