Advertisment

Rasi Palan 3rd September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 3rd September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 3rd September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 3rd September 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 3rd September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 3rd September2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 3, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நிதி விவகாரங்கள் மற்றும் பணியிடங்களில் சாதகமற்ற காலநிலை நிலவும். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பதனால், மனச்சோர்வு அடைவதை தவிர்க்கலாம். நிதானம் காப்பது நல்லது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கெட்ட தருணங்களை அவ்வப்போது மறந்து அதிலிருந்து விடுபடுவது நல்லது. பிறரின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். மனக்குழப்பங்கள் மிகுந்த நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

ஜாதக பலாபலன்களில் நம்பிக்கை கொள்வீர்கள். ஜாதகத்தில் குறிப்பிடுபவை எல்லாம் அப்படியே நம்பலாம் என்ற கருத்திலிருந்து விலகிச்செல்வீர்கள். நாவடக்கம் அவசியம். தியானம் செய்வது மனஅமைதிக்கு நல்லது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடந்தகால கெட்ட நினைவுகளிலிருந்து விடுபடுவீர்கள். தாங்கள் யார், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. வார்த்தைகளில் கடுஞ்சொற்கள் தவிர்ப்பது நலம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களால் விமர்சிக்கப்படுவீர்கள். மற்றவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் உதவும். தன்கையே தனக்குதவி என்பதையும் எப்போதும் மற்றவர்கள் நமக்காக உதவி செய்துகொண்டேஇருக்கமாட்டார்கள் என்பதை உணர்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை முதலில் விடுங்கள். கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பதை புரிந்துகொள்ளுங்கள். பாதுகாப்பு விசயங்களில் அதிக கவனம் கொள்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

பயணம் மேற்கொள்வீர்கள். தொலைபேசி நல்ல தகவல்களை கொண்டுவந்து தரும். தோல்வி இறுதி இல்ல என்பதை உணர்வீர்கள். விரைவில் வெற்றிக்கனியை தன்வசமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சிறந்த முயற்சிகள், சிறப்பான பலனையே தரும் என்பதில் நம்பிக்கை கொள்வீர்கள். நமக்கு நடக்கும் நல்லது மற்றும் கெட்டதுக்கு நாமே காரணம் என்பதை எந்நாளும் மறக்கமாட்டீர்கள். நிதிவிவகாரங்களில் சுணக்கமான நிலை நிலவும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கிரகங்களின் சாதகமான பார்வையால், எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். நிதி விவகாரங்கள், முக்கியமான பொருட்களை வாங்குவீர்கள், நீண்டகால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பேச்சில் நிதானம் அவசியம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றலாம். நண்பர்களுக்காக காத்திருக்கவேண்டியதிருக்கும். மனச்சோர்வை தவிர்ப்பது நல்லது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணிச்சுமை அதிகரிப்பால், மனம் தளர்வடைவீர்கள். வெளிவட்டார தொடர்பில் அதிக கவனம் தேவை. பணவிரயம் உள்ளதால், நிதிவிவகாரங்களில் அகலக்கால் வைப்பதை தவிர்க்கவும். தம்பதியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உயரதிகாரிகளிடம் கருத்து வேறுபாட்டை தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானம் காப்பதால், நண்பர்களது இழப்பை தவிர்க்கலாம். நிதானம் மிகவும் தேவைப்படும் நாள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment