Advertisment

Rasi Palan 3rd September 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 3rd september 2020 rasi palan today - இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
New Update
Rasi Palan Today 3rd september, இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 3rd september, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 3rd September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 3rd September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 3, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

ரொமான்டிக் எண்ணம் அதிகரிக்கும். பால்ய நினைவுகளை அசைபோடுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடுவீர்கள். பணவிவகாரத்தில் அதிருப்தி நிலவும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மனஉறுதி அதிகரிக்கும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். அதிசயத்தை உணர்வீர்கள். விலையுயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

இரகசியங்களை பாதுகாப்பீர்கள். ஏற்ற இறக்கங்களை உணர்வீர்கள். பிரியமானவர்களின் பாதுகாவலனாக இருப்பீர்கள். நேர்மையுடன் இருப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தடைபட்ட காரியங்கள் நடக்க துவங்கும். தடைகள் விலகும். புதிய விவகாரங்களில் தலைமை ஏற்பீர்கள். தவிர்க்கஇயலாதவர்களாக மாறுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மற்றவர்களை குற்றம் சொல்வதை தவிர்த்தல் நல்லது. இன்று நாம் இருக்கும் நிலைக்கு நேற்று நாம் செய்த செயல்களே காரணம் என்பதை உணர்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். சட்ட விவகாரங்களும் சாதகமாக அமையும். தொலைவில் உள்ள நண்பர் தொடர்பு கொள்வார். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

புதிய தொழில்முறைகள் உத்வேகத்தை தரும். இலக்கை நோக்கி நடை போடுவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். மனதில் புதிய உத்வேகம் பிறக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

புதிய நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

கடந்தகால செயல்களினால் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். கடன்களை அடைப்பீர்கள். புதிய உத்வேகம் பிறக்கும். போட்டி, பந்தயங்களில் மனம் செல்லும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனம் என்ன சொல்லுதோ அதை செய்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் ஆதரவு உண்டு.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி நடந்தேறும். முயற்சிகள் பலிதமாகும். தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

புதுப்புது ஐடியாக்கள் பிறக்கும். அரிதான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment