மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கணக்கில்லாமல் அன்பு செலுத்துவீர்கள். உங்கள் பலமே அதுதான். பணியிடத்தில் வழக்கம் போல எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தட் என்று செய்து முடிப்பீர்கள். பணஉதவி செய்வதில் கவனமாக இருக்க முயலுங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
வெளியூர் பயணம் இருந்தால், சற்று தள்ளி வையுங்கள். முடிந்த இந்த வாரம் முழுவதுமே ஒத்தி வையுங்கள். தோல்விகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலம் சார்ந்த பிரச்சனை ஏற்படும். கவனமாக இருத்தல் வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
ஆச்சர்யமான சில விஷயங்கள் இன்று உங்களுக்காக காத்திருக்கின்றன. ஆனால், பயம் வேண்டாம். அது நல்லதாகவே இருக்கும். தேவையான அளவிற்கு சம்பாத்யம் கொண்ட பணி கிடைக்க வாய்ப்புள்ளது. மனம் லேசாக உணரும் நாள் இன்று.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மாற்றத்தை நோக்கி நகரும் திட்டங்கள் உங்களிடம் நிறையவே இருக்கும். ஆனால், அதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கும். கிரக நிலைகளின் மாறுபட்டால், சில சங்கடங்கள் ஏற்படும். ஆனால், அவை தற்காலிகமானதே. சுமாரான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மீண்டும் உங்கள் வாழ்க்கையின் ஃபார்வேர்ட் காலத்திற்கு செல்ல நினைத்தால் நிச்சயம் முடியாது தானே? பிறகு, எதற்கு வருத்தம். தூக்கிப் போட்டு அடுத்த வேலைக்கு செல்லுங்கள். வெற்றி உங்கள் வாசல் கதவு அருகே தான் நிற்கிறது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கடன் பிரச்னைக்கு இன்று முடிவு கட்டுவீர்கள். பணவரவு முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் ஏற்பட்டுள்ளது. குடும்ப உறவில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறக்கும். திருப்தியான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்கள் எதிர்கால திட்டங்கள் குறித்து நல்ல விழிப்புணர்வு உங்களுக்கு கிடைத்திருக்கும். அது உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், குடும்ப விஷயத்தில் மேலும் அக்கறை காட்ட வேண்டும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நண்பர்களின் ஆலோசனை கேட்டு நடந்து கொள்வீர்கள். அவர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஞாபக மறதி சிக்கலால் சில சமயங்களில் அசௌகரியமான தருணங்களை சந்திக்க நேரிடும். சற்று உஷாராக இருங்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பணியிடத்தில் நிறைய மாற்றங்களை காண்பீர்கள். அது உங்களின் ஏற்றத்திற்கு வழிவகுக்கும். உங்களது முயற்சியும் சேரும்போது, வெற்றி தேடி வரும். குடும்ப உறவில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அதிகம் அன்பு வைப்பதாலேயே, சில ஏமாற்றங்களை காண்பீர்கள். அது உங்களுக்கு பழக்கப்பட்டதாக இருந்தாலும், கவனம் தேவை. மாணவர்களின் கல்வித் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்கள் பாக்கெட் பர்ஸ் காலியாகும் நாள் இது. உண்மை தான். தேவையில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்கள் மனநிம்மதி கெட்டும் போகும். பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். வெற்றி உறுதி.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
அறிவியல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நேரம் கடந்து பணியை முடிக்கும் வழக்கத்தை கைவிடுங்கள். வெற்றி வந்து சேரும்.