Advertisment

Rasi Palan 4th August 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 4th august 2020 rasi palan today rasi palan tomorrow - இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
New Update
Today rasi palan, rasi palan august 4, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 4th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 4th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 4, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். யாவும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நடப்பவை நன்மைக்கே என்பதை உணர்வீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். வெற்றி இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

புதன் கிரகத்தால் மனம் உற்சாகம் பெறும். கனவுகள் நனவாகும். தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

இக்கட்டான நிலைகளில் கடின உழைப்பால் வெற்றியை தன்வசமாக்குவீர்கள். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

யதார்த்தத்தை உணர்வீர்கள். தான் சிரித்து பிறரையும் சிரிக்கவைத்து மகிழ்வீர்கள். எதையும் லேசாக எடுத்துக்கொண்டால் கடினம் என்று இவ்வுலகில் ஏதுமில்லை.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சுயதேவைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். தடைபட்ட காரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தவறுகளை மன்னித்து அருளுவீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மற்றவர்கள் மீது பொல்லாங்கு சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்கும் பலன்களுக்கு நீங்கள்தான் காரணமேயன்ற மற்றவர்கள் அல்ல என்பதை உணருங்கள். அதிருப்தியாக இருப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நேர்மறைத்தன்மையுடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையால் தடைபட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை துளிர்க்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தொழில் விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். முக்கிய விவகாரங்களில் தலைமைப்பொறுப்பு ஏற்பீர்கள். முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பதறிய காரியம் சிதறும் என்பதை இன்று உணர்வீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக விழிப்புணர்வு அவசியம், பின்விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவது நல்லது.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எதிலும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நல்லது. அரிய வாய்ப்பை தவற விடும் வாய்ப்பு உள்ளது கவனம். ஓய்வு தேவைப்படும் நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

உண்மையான அன்பை உணவீர்கள். மறதியால் அவதிப்பட நேரலாம். நண்பர்களால் தவறான பாதைக்கு செல்ல நேரிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment