Rasi Palan 4th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 4th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 4th February 2020: இன்றைய ராசிபலன்
Rasi Palan 4th February 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 4th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 4th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 4, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

இன்றைய நாள் 

புதன் அதிசாரம் உள்ளவர்கள் புதிய தொழில்களை தொடங்க உகந்த நாளாக இந்நாள் உள்ளது. அனைவராலும் அனைவரும் விரும்பும்படியாக இருந்துவிடமுடியாது. மற்றபடி, கிரகங்கள் இன்று அனைவருக்கும் சாதகமான பலன்களை அளிக்கும் இடத்திலேயே அமர்ந்துள்ளன.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சூரிய – சந்திர கிரகங்களின் பார்வையால், மன சஞ்சலம் அதிகரிக்கும். மற்றவர்களின் உதவிகள் தக்கநேரத்தில் கைகொடுக்கும். பிரியமானவர்களுடன் நீண்ட பயணம் மேற்கொள்வீர்கள். உங்களின் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இருப்பதால், மற்றவர்களால் விரும்பப்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

நிதி விவகாரங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். எந்தவொரு காரியத்தையும் செய்யும்முன்னர் அதுதொடர்பாக நிறைய ஆலோசிப்பீர்கள். சொத்து தொடர்பான வழக்கு விவகாரங்களில் சாதகமான தகவல் கிடைக்கப்பெறுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

போராட்டம் என்றாலும் முடிவு சிறப்பானதாக அமையும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதனால், தடைகளை தகர்ந்து வெற்றி பெறலாம். தன்னையே நம்பாமல், பிறர் சொல்லை கேட்டு செயல்களில் ஈடுபடுவது விரயத்திற்கே வழிவகுக்கும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

சுயஒழுக்கம் தொடர்பாக மற்றவர்கள் கருத்து தெரிவிப்பார்கள். உங்களால் எந்தெவாரு செயலிலும் மனம்ஒத்த நிலை இல்லாதுபோகும். செயல்களுக்கேற்ற தகுந்த நேரத்தை வகுப்பதில், இயலாமையால் வருத்தப்படுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

திட்டமிட்ட காரியங்களை செவ்வனே செய்துமுடிப்பீர்கள். செயல்களை செய்வதற்கு முன்னர் அதுதொடர்பான ஆயத்த நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கடின பிரயத்தனம் செய்ய தயங்கமாட்டீர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

வீட்டு உபயோக தேவைகளை முன்நின்று நிறைவேற்றுவீர்கள். நாளுக்கு நாள் விருப்பங்கள் வேறுபடும் என்பதால், அன்றைய செயல்களை அன்றன்றைக்கே முடித்துவிடுவது நல்லது. திறந்த மனதுடன் இருக்க முயல்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்ய நேரிடும் என்பதால், செயல்களில் அதிக விழிப்புணர்வு அவசியம். புத்துணர்வுக்காக பயணங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். வேலை, தொழில் விவகாரங்களில் சாதகமான நிலை நிலவும். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மனநிலையில் இருப்பீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். மற்றவர்களின் பேச்சுகளை காது கொடுத்து கேட்பதனால், விரயங்களை தவிர்க்கலாம். அறிவுரைகள் தக்க நேரத்தில் கைகொடுக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

அடுத்த 3 மாதங்கள் உங்கள் வாழ்வில் வசந்த காலங்களாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சியடைவீர்கள். எதை செய்யப்போகிறீர்களோ, அது தொடர்பான முன்நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நிதி விவகாரங்கள் திருப்தியளிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

மனதில் மகிழ்ச்சி இருந்தாலும், ஏதோ ஒன்று மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டே இருக்கும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தேவையற்ற விவகாரங்களில் ஈடுபடாமல் இருந்தாலே மன அமைதி கிட்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சுய பாதுகாப்பே எப்போதும் பிரதானம். வாழ்க்கைப்பயணம் எப்போதும் சுகமாகவே இருந்துவிடாது என்பதை மறந்துவிடவேண்டாம். எத்தருணத்திலும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்விப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பணியிடங்களில் மற்றவர்களின் புகாருக்கு ஆளாவீர்கள். எதிரிகளை நேசிப்பதனால், பல்வேறு இன்னல்களிலிருந்து விடுதலை பெறலாம். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.

Get the latest Tamil news and Horoscope news here. You can also read all the Horoscope news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rasi palan 4th february 2020 rasi palan today

Next Story
Rasi Palan 3rd February 2020: இன்றைய ராசிபலன்Rasi Palan 3rd February 2020: இன்றைய ராசிபலன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express