Rasi Palan 4th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 4th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 4th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 4th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 4th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 4th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 4th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 4, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பண வரவு இருக்கும். வசூலாகாத கடன் தொகை திரும்பக் கிடைக்கும். நல்ல மனிதர்களை தேடிக் கொண்டிருப்பீர்கள். அவர்கள் உங்கள் அருகில் தான் உள்ளார்கள். காதலர்களுக்கு இனிமையான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

கிடைக்கும் கேப்பில் கோல் அடிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு தான். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள் இது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியேற, பெற்றோர்கள் துணை புரிவார்கள். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

மன அழுத்தத்துடன் காணப்படுவீர்கள். குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் நேரம் இது. ஆனால், தவறுகளை உடனுக்குடன் சரி செய்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால், பிழைத்துக் கொள்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் ஈடுபடுவீர்கள். திருமண நிகழ்வு விரைவில் அரங்கேற வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாட்டுடன் இந்த நாளை தொடங்குங்கள். வெற்றி உறுதி.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், தொட்ட காரியங்கள் துலங்கும். ஆனால், மற்ற கிரக நிலைகளின் அமைப்புகளால் தெளிவற்ற மனநிலை இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதி தேவை. சில தடுமாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நண்பர்களின் முட்டாள்த்தனமான யோசனைகளை ஒதுக்கி வையுங்கள். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி சென்றுக் கொண்டே இருங்கள். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

நீங்கள் எதிர்பார்த்த தருணம் கிடைப்பதில் சில காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் சுபம் உண்டாகும். உங்கள் திட்டங்கள் செயல் வடிவமாக மாறும் தினம் இது. கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்ததால், பக்குவத்துடன் செயல்பாடுகளை அணுகுவீர்கள். தோல்விகளையும் கடந்து செல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

தவறுகளில் இருந்து பாடம் கற்பீர்கள். முன்னேற்றமான நாட்களை இனி சந்திப்பீர்கள். தோல்விகள் உங்களை மேலும் வலிமையான நபராக மாற்றும். மன அழுத்தங்கள் குறையும். சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

நீங்கள் ஒதுக்கினாலும் பிரச்சனைகள் உங்களை ஒதுக்காது. சில முயற்சிகளில் சறுக்கல்களை சந்திப்பீர்கள். சுயக்கட்டுப்பாடு இன்றி சிரமப்படுவீர்கள். விநாயகர் வழிபாடு இன்னல்களை குறைக்கும். தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், சில காலத்திற்கு ஒத்தி வையுங்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

சூரியன் உங்கள் துணை நிற்பதால், வெற்றி வசப்படும். முன்னர் இருந்த சில தடுமாற்றங்கள் வெகுவாக குறையும். சுய ஆர்வம் கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களை முன்னேற வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: