Advertisment

Rasi Palan 4th June 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan june 4th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan june 4th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 4th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 4th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 4, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

பணம் உங்கள் கைகளில் தவழும்.  அதை ஏந்திக் கொள்ள மனம் துள்ளும். ஆனால் பாருங்க, அதை அனுபவிக்கும் முன்னர், பல செலவுகள் வந்து நிற்கும். கைகளில் பணம் இருந்தாலும், செலவும் இருந்து கொண்டே இருக்கும். எவரையும் எளிதாக நம்ப மாட்டீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

குடும்ப சூழல்களை புரிந்து செயல்படுவது புத்திசாலித்தனம். சில நேரங்களில் உங்களின் நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மீதே உங்களுக்கு சந்தேகம் வரலாம். அப்போது தெளிவு மிக அவசியம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

தாய் வழி சொந்தங்களிடம் இருந்து பணவரவு இருக்கும். மன அழுத்தம் குறைந்து காணப்படுவீர்கள். சில தாமதங்கள் தோல்விகள் ஆகாது. நம்பிக்கையோடு காத்திருங்கள். கடவுள் வழிபாட்டோடு இன்றைய தினத்தை துவங்குங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். வாழ்க்கையை தித்திப்பாக நகர்த்திக் செல்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. தேவையில்லாத விவகாரங்களில் மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

வெற்றி உறுதி என்பது தெரியும் வரை போருக்க செல்ல வேண்டாம் என்று கூறுவது தான் தான் தலைவனின் அறிவுரை. உங்களின் முயற்சிகள் தோல்வி அடைவதற்கும் இதுவும் ஒரு காரணம். ஏன் என்பதை மேற்சொன்ன வாக்கியத்தில் இருந்தே தேடுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

சூழலுக்கு ஏற்ப உங்களின் தகவமைத்துக் கொள்ளும் திறமை பல சந்தர்ப்பங்களில் உங்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், எல்லா இடத்திலும் அது கைக்கொடுக்காது. உங்கள் துணையின் தேவை என்ன, குடும்பத்தின் தேவை என்ன என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

எப்போதும் வாழ்க்கையை சீரியஸாக பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சில திறமையான முயற்சிகள் தான் தேவையே தவிர, மன அழுத்தம் என்பது எப்போதும் தேவையற்றது. கடினமான சூழல்கள் எப்போதும் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

போராட்ட குணம் உங்களுக்கு இயற்கையில் இருக்கும். உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அது வந்து சேருவது கொஞ்சம் தாமதமாகலாம். கோயிலுக்கு சென்றால், பூசாரியின் காலில் விழுந்து வணங்குங்கள். பூர்வ பாவங்கள் கழியும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

குழந்தை பாக்கியம் உண்டாகும். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மை உங்கள் பக்கமே. அனாவசிய பேச்சுகளை தவிர்த்து செயலில் கவனமாக இருங்கள். வெற்றி உறுதி.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படலாம். அதை நம்பிக்கையுடன் தகர்த்திடுங்கள். நிதிநிலைமை சறுக்கினாலும் அதை சமாளிக்கும் திறன் கொண்டிருப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். வீண் விவாதம் வேண்டாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சில சமயம் அது உங்களுக்கு சாதகமாகவும், பல நேரங்களில் அது பாதகமாகவும் இருக்கும். கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment