Today Rasi Palan, 4th March 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 4th March 2020 : இன்றைய ராசி பலன், மார்ச் 4, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் திட்டமிட்ட காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். குறுகிய கால பிரச்னைகளில் நிரந்தர தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கடந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை வீணாக்குவது தவறு. மறதி சிறந்த மருந்து என்பதை பிறர் சொல்ல உணர்வீர்கள். முக்கிய திட்டங்களுக்கு தலைமை ஏற்பீர்கள். சிறு தவறுகளினால் அதிக விரயம் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். சரி, தவறு என்பதை மற்றவர்களுக்கு புரியும்படி உணர்த்துவீர்கள். ரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எதிர்பாராத திருப்பங்களினால், மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் முக்கிய விவகாரங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிட்டும். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கற்பனை குதிரைகளை தட்டிவிடுவீர்கள். மனதில் புதுப்புது ஐடியாக்கள் தோன்றும். புதிய முயற்சிகளை செயல்படுத்தும்போது பின்விளைவுகளை ஆராய்வது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பம்முற இடத்துல பம்மியும், நிமிர்ற இடத்துல நிமிர்ந்தும் உங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வது உங்களின் தனிச்சிறப்பு. உங்களுடன் பொழுதை கழிக்க மற்றவர்கள் விரும்புவர்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
பணியிடங்கள் மற்றும் குடும்பத்திலும் மற்றவர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். கடல் மார்க்கமான உல்லாச பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். ஆனால், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்களின் பிரியமானவர்களுக்காக அதிக சிரத்தை எடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் அந்தரங்க விசயங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மற்றவர்கள் செய்ய தயங்கும் விஷயங்களை அநாசயமாக செய்துமுடிப்பீர்கள். பிரியமானவர்களுக்கு கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வருங்காலம் வசந்தகாலம் என்பதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். வாகன போக்குவரத்தில் நிதானம் அவசியம்.