Today Rasi Palan, 4th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 4th May2020: இன்றைய ராசி பலன், மே 04, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
முயன்றால் வெற்றி மட்டுமல்ல, இந்த உலகமும் நமது கீழே என்ற எண்ணம் ஏற்படும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். முக்கிய விவகாரங்களை தலைமையேற்று செயல்படுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
கிரகங்களின் சாதகமற்ற பார்வையினால், எடுத்த காரியங்களை செயல்படுத்துவதில் தடைகள் ஏற்படும். மற்றவர்களின் அறிவுரைகளை காதுகொடுத்து கேட்டால் நலம். உணவு விஷயங்களில் அதிக கவனம் அவசியம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
முக்கியமான விவகாரங்கள் புதன் கிரகத்தின் பார்வையால், எண்ணியபடி ஈடேறும். மனதில் புத்துணர்வு பிறக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சுய தேவைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நிதி விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள்.சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். நீண்டகால திட்டம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
புதிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி நிலை நிலவும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்கள் கருத்துகளை பலர் பரிகாசம் செய்வதால் மனச்சோர்வு அடைவீர்கள். பொதுநலமாக செயல்படுவீர்கள். மற்றவர்கள் தங்கள் மீது வார்த்தை தாக்குதல் நடத்துவார்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
பணியிடங்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் வாய்ப்பு இருப்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். விரயங்களை தவிர்க்க மனக்கட்டுப்பாடுடன் இருத்தல் வேண்டும். விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவது நலம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பயணம் , சாகச செயல்களில் மனம் ஈடுபடும். நீண்ட தொலைவு பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நிதி விவகாரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும். பண விரயத்தை தவிர்க்க மனக்கட்டுப்பாடு அவசியம். கனவு நனவாக அதிகம் உழைக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
சனி கிரகத்தின் உதவியால், நீண்டகாலமாக இருந்துவந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.மற்றவர்கள் உங்களை குற்றம் சாட்ட வாய்ப்பு இருப்பதால் விலகி இருப்பது நல்லது. மற்றவர்கள் உங்களது கருத்தை பரிகாசிப்பர்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
மகிழ்ச்சியான நாள். நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். மனமொத்தவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். இலக்குகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil