Rasi Palan 4th November 2020: இன்றைய ராசிபலன்: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 4th November 2020: இன்றைய ராசி பலன், நவம்பர் 2, 2020:
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இல்லை என்பதை உணருவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். வரவு செலவுகளைத் தாண்டி, வாழ்வில் ஒளிந்திருக்கும் சில ஆழமான விடயங்களுக்கு அர்த்தம் தேடத் தொடங்குவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21): கணக்கில்லாமல் அன்பு செலுத்துவீர்கள். உங்கள் பலமே அதுதான். பிறரிடம் அன்பு செலுத்துதல், உங்கள் பலவீனம் இல்லை என்பதையும் உணரத் தொடங்குவீர்கள். பணயிடங்களில் உங்களின் முக்கியத்துவம் பெருகும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21): வெளியூர் பயணம் இருந்தால், சற்று தள்ளி வையுங்கள். முடிந்த இந்த வாரம் முழுவதுமே ஒத்தி வையுங்கள். தோல்விகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலம் சார்ந்த பிரச்சனை ஏற்படும். கவனமாக இருத்தல் வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) : மாற்றத்தை நோக்கி நகரும் திட்டங்கள் உங்களிடம் நிறையவே இருக்கும். ஆனால், அதை செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கும். கிரக நிலைகளின் மாறுபட்டால், சில சங்கடங்கள் ஏற்படும். ஆனால், அவை தற்காலிகமானதே. சுமாரான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : வெற்றி உங்கள் வாசல் கதவு அருகே தான் நிற்கிறது. இழந்த காலத்தையும், இழந்த நேரத்தையும் பற்றி சிந்திப்பது தேவையற்றது. உங்களின் புத்திசாலித்தனத்தை சந்தேகம் கொள்ளாதீர்கள். எந்தவொரு முயற்சியும் மற்றவர்களால் வரவேற்கப்படும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : எதையும் சரியாக கணிக்க முடியாத நிலையில் இருந்த உங்கள் மனநிலை, தற்போது ஒரு சமவெளியை அடைந்துள்ளது. பணவரவு முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் ஏற்பட்டுள்ளது. குடும்ப உறவில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறக்கும். திருப்தியான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : எதிர்கால திட்டங்கள் குறித்து நல்ல விழிப்புணர்வு உங்களுக்கு கிடைத்திருக்கும். அது உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், குடும்ப விஷயத்தில் மேலும் அக்கறை காட்ட வேண்டும். மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : நண்பன் ஒரு வந்த பிறகு... விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு... என்ற பாடல் வரி உங்களுக்கு மிகவும் பொருந்தும். நண்பர்களை நண்பர்களின் ஆலோசனைகளை புறம் தள்ளாதீர்கள். ஆக்கபூர்வமாக செயல்படவேண்டிய நாள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : வாழ்கையில் மாற்றங்களை காண முன்வருவீர்கள். வளைந்துக் கொடுக்கும் தன்மையே உங்களின் பலம். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். குடும்ப உறவில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : பிறரிடம் அன்பை வெளிபடுத்துங்கள். அன்பு எதேச்சையான விஷயம் என்பதை எளிதில் புரிந்து கொள்வீர்கள். மாணவர்களின் கல்வித் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : அதிகளவு பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நாள் இது. தேவையற்ற பயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் உங்கள் மனநிம்மதி கெட்டும் போகும். பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம் என்ற பாடல் வரிகளை அவ்வப்பொது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். அனைத்துக்கும் தீர்வு உண்டு.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) : அரசியல் களத்தில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயற்சி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள். நேரம் கடந்து பணியை முடிக்கும் வழக்கத்தை கைவிடுங்கள். வெற்றி வந்து சேரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.