Today Rasi Palan, 4th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 4th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 4, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
காலைவேளை நற்செய்திகளால் மனம் மகிழ்ச்சியடையும். உபயோகமற்ற பொருட்களை விலக்குவீர்கள். மனம் சொல்வதை கேட்டு நடப்பீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எதையும் கேள்வி கேட்காமல் ஏறற்றுக்கொள்வது தப்பு என்பதை உணர்வீர்கள். பின்விளைவுகளை அறிந்து செயல்படுவது நல்லது. கடின உழைப்பு தேவைப்படும் நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
கிரகங்களின் சாதகமான பார்வையால் நன்மதிப்பு பெறுவீர்கள். எண்ணிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மகிழ்ச்சியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
இன்று அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் வேண்டும். எதையும் நாளைக்கு செய்யலாம் என்று தள்ளிப்போட வேண்டாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
உறவினர்கள், சக பணியாளர்களால் மனக்கசப்பு ஏற்படலாம். தவறை சுட்டிக்காட்டுவீர்கள். சமாதானம் செய்வதால் பகைவர்களும் நண்பர்கள் ஆவர்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பிறர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துகொள்வர். பேச்சை விட செயலே பிரதானம் என்பதை உணர்வீர்கள். எதிலும் விழிப்புடன் நடந்துகொள்வது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பிரியமானவர்களுடன் வாக்குவாதம் செய்வீர்கள். விட்டுக்கொடுத்து செல்வதால் நன்மைகள் ஆயிரம் என்பதை உணர்வீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
செயல்களில் திருப்திகரமான நிலை ஏற்படும். எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். நிதி விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் விரும்பியபடி ஈடேறும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். சிலர் உங்களை பரிகாசிப்பர்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். பழைய அனுபவங்களிலிருந்து புதிய பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பீர்கள். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். திறமைகள் வெளிப்படும். புதிய கலைகளை கற்றுக்கொள்ள முயல்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.