மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
சில திடீர் சந்திப்புகள், உங்களின் வாழ்க்கையை மாற்றும். உங்கள் திட்டங்களை மாற்றும். நீங்கள் எடுக்கும் முடிவே உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும். ஆனால், தவறான ஆலோசனைகளை புறந்தள்ளுங்கள். நண்பர்களில் கருப்பு ஆடுகளை கண்டறிய பழகுங்கள். இல்லையெனில், உங்கள் வெற்றி பாதிக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்கள் கனவுகளை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளுங்கள். ஆனால், தவறான பாதையை தூக்கி எறியுங்கள். கடினமான தருணங்களில் இருந்து உங்கள் தலையை சற்று மறைத்தே வையுங்கள். அமைதியாக, நிதானமாக பணியை மேற்கொள்ளுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதிநிலை நேற்றைவிட, இன்று சற்று மோலோங்கி இருக்கும். உங்கள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வீர்கள். நண்பர்களின் உதவியால் பலன்கள் கிடைக்கும். தூக்கம் இல்லாமல் அவதிப்படுவீர்கள். நெருங்கிய இழப்பு ஒன்று உங்களை வாட்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
அடுத்தவர்கள் உங்களைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என நினைத்து வருத்தப்பட வேண்டாம். நீங்கள் அவர்களை விட புத்திசாலிகள் என்பதை மறக்க வேண்டாம். நிதிநிலைமை ஏற்றமுடன் இருக்கும். கணவன், மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பணம் பத்தும் செய்யும். உங்கள் விஷயத்தில் பதினொன்னும் செய்யும். எதிரிகளை கவனமாக கையாளுங்கள். அங்கீகாரம் கிடைக்க தாமதமானாலும், இறுதியில் வெற்றி கிடைப்பது உறுதி. உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். கடுமையான முதுகுவலியால் அவதிப்படுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும். உங்களை விரும்புபவர்களை நேசிக்கப் பழகுங்கள். உங்களை வெறுப்பவர்களையும் நேசிக்கப் பழகுங்கள். பல மாற்றங்கள் உண்டாவதை நீங்கள் உணர்வீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் கிட்டும். பெற்றோர்களை வணங்குங்கள். ஜெயம் உறுதி!
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
முற்றிலும் புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். அது உங்களுக்கு மன நிறைவைத் தரும். வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி வந்து சேரும் நாள். காதலில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக, திருமணம் விரைவில் நடக்கும். கணினி பிரிவில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் திட்டங்களில் உங்களுடன் பணி செய்பவர்களையும், மற்றவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். தலைமைப் பண்பு இயற்கையாக உங்களுக்கு உண்டு. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். யோகம் உங்களைத் தேடி வரும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் உடல்நிலை மிகுந்த கவனம் தேவை. இப்போதுள்ள அமைப்புகளின் படி, எதிர்காற்றை அதிகம் சந்திக்காதீர்கள். அது உங்கள் உடல்நிலைக்கு ஆகாது. குழந்தையை முடிந்தவரை மற்ற கைகளுக்கு கொடுக்காதீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
முன்னெச்சரிக்கையாக இருந்து பணிகளை முடியுங்கள். மற்றவர்களின் அன்பை புறக்கணிக்காதீர்கள். சிறப்பான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் இருக்காது. நண்பர்களின் ஆலோசனை உங்களை மேலோங்க வைக்கும். நிலையற்ற தன்மை மாறும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
கடுமையான சூழ்நிலைகளை கவனமுடன் கையாளுங்கள். எதிர்கால தேவையை நிவர்த்தி செய்ய நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அப்படி நடந்து கொள்ளும் பட்சத்தில் வெற்றி உங்களை தேடி வரும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. பணி நிமித்தம் வெளிநாடு செல்லும் அமைப்பு உள்ளது. கற்பனையில் மிதப்பதை குறைத்துக் கொண்டால் பலன் தரும். திருமண யோகம் வந்திருக்கிறது. காளி கோவிலில் வழிபாடு நடத்துங்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும்.