Advertisment

Rasi Palan 5th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 5th February 2020: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 5th February 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 5th February 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 5th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 5th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 5, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

இன்றைய நாள் 

சந்திரனின் நகர்வால், சர்வதேச அளவில் சில மாற்றங்கள் நிகழும். கணிப்பாளர்களின் கணிப்பு நிறைவேறும். கிரகங்களின் நகர்வு சிலருக்கு பாதகங்களை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதால் விழிப்புணர்வு இன்றியமையாதது.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மகிழ்ச்சியான நாள். சாகச முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மதம்சார்ந்த விவகாரங்களில் அதிக ஈடுபாடு ஏற்படும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

மற்றவர்களின் அறிவுரைகளை காது கொடுத்து கேட்பதால் ஒன்றும் குறைந்துபோய்விட மாட்டீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகள், தக்க நேரத்தில் கைகொடுக்கும். பின்விளைவுகளை ஆராய்ந்து முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மற்றவர்களுடன் விவாதிப்பதனால் மனதில் இருந்துவந்த குறைகள் அகலும். கருத்துகளில் வேறுபாடுகள் இருப்பின் அதை உடனே களைவது நல்லது. வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

பொறுப்புகளை தட்டுக்கழிப்பது தவறானது என்பதை உணர்வீர்கள். அதிக வேலைப்பளுவால் சிலவற்றை பிறகு பார்த்துகொள்ளலாம் என்று ஒதுக்குவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதனால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

குழந்தைகளுடன் இருப்பதே வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணமாக கருதுவீர்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இளைய தலைமுறையினருக்கு போதிய அறிவுரைகளை வழங்குவீர்கள். அவர்களிடமிருந்து சில விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால், வீடு மற்றும் தொழில் விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். யார் என்ன சொன்னாலும், முடிவு எடுப்பது நீங்கள் மட்டுமே என்பதை எத்தருணத்திலும் மறந்துவிடமுடியாது. சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

புதன் மற்றும் நெப்டியுன் கிரகங்களின் பார்வையினால், பிரியமானவர்களிடையே அன்பு, அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத நிகழ்வுகளால், புது உத்வேகம் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

எது சரி எது தவறு என்பதை பகுத்தாராய்வீர்கள். பின்விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவீர்கள். கடுஞ்சொற்களை தவிர்த்தல் நல்லது. உங்களுடைய பிரச்னைகளை பிறர் புரிந்துகொள்வதில்லையே என்று புலம்புவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

தனிமை உணர்வுடன் இருப்பதாக உணர்வீர்கள். உங்களுடைய நற்செயல்களால், பிறரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவீர்கள். பொழுதுபோக்கு விவகாரங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

என்ன செய்தோம் என்பதைவிட என்ன செய்யப்போகிறோம் என்பதில் அடங்கியிருப்பதே வாழ்க்கை.. ரகசியம் பெரும்பாலான இடங்களில் தேவைப்படுவதுதான் என்பதை உணர்வீர்கள். நேரம் காலம் வரும்போது அனைத்தும் நன்றாகவே நடந்தேறும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மனம் கிரியேட்டிவாக எதையும் சிந்தித்துக்கொண்டிருக்கும். நேரத்தின் மதிப்பை அறிந்து அதை வீணடிக்க தயக்கம் காட்டுவீர்கள். மற்றவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கற்பனைக்குதிரையை தட்டிவிடுவீர்கள். தான் யார் என்பதை அறிய முற்படுவீர்கள். உங்களது நம்பிக்கைகள் மிக உயரியதாக இருக்கும். பணிபுரியும் இடங்களில் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Rishabam Rasi Palan Meenam Rasi Palan Kanni Rasi Palan Midhunam Rasi Palan Simmam Rasi Palan Kumbam Rasi Palan Magaram Rasi Palan Dhanusu Rasi Palan Viruchigam Rasi Palan Thulam Rasi Palan Kadagam Rasi Palan Mesham Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment