Today Rasi Palan, 5th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 5th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 5, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நேர்மையாக செயல்படும் போதும் தோல்விகள் வரும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். எப்போதும் உங்கள் செயல்பாடு தனித்து தெரியும் வகையில் இருக்க வேண்டும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எடுத்த வேலையை குறித்த நேரத்திற்குள் முடித்துவிடுங்கள். நீங்களாகவே சூழல் பார்த்து, உங்கள் செயலின் முடிவை தீர்மானித்துவிடுங்கள். கடினமான பணிகளை ஒப்புக் கொள்ள வேண்டாம்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
சமயோஜிதமாக செயல்படுவீர்கள். உடனிருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். கடவுள் பக்தி அதிகரித்து காணப்படும். உங்கள் ஒருவர் கூட குறை சொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
அதிகம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்வது நல்லது கடக ராசிக்காரர்களே. வயிறு உப்பிக் கொண்டே போகுது பாருங்கள். காலம் மாறினாலும் நட்பை மறக்க மாட்டீர்கள். அதுவே உங்கள் ஸ்பெஷல்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது. அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழி பட்டால் சிறப்பு. வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
இல்லற வாழ்க்கையில் திடீர் இனிப்பு உருவாகும். மாற்றங்களை உணர்வீர்கள். காதலர்களின் நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் சென்றால், இன்று போல் ஒரு மகிழ்ச்சியான நாள் கிடையாது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எலக்ட்ரிக்கல் துறையில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது. ரயிலில் வெளியூர் செல்ல நேரிடலாம். அது திடீர் பயணமாக அமையும். திருமண தேதி முடிவாக வாய்ப்புள்ளது. இன்பமான நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
செலவை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். வீண் விவாதங்களில் தலை காட்ட வேண்டாம். அது உங்களுக்கே எதிராகக் கூட திரும்ப வாய்ப்புள்ளது. பெண் சுகம் வெறும் மாயை என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர இது முதல் புள்ளியாக இருக்கலாம். சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு இருப்பதால் யாரும் உங்களை ரசிக்கப் போவதில்லை.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
நான் தான் ராஜா என்று நீங்கள் நினைக்கும் வரை உங்கள் பக்கம் வெற்றி வரவே வராது. அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றிப் பெற இன்றைய நாள் உதவாது என்பதே உண்மை.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
இனிப்பு பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. அது உங்கள் உடல் நலத்திற்கு இப்போதைக்கு ஆகாது. முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகளையே சாப்பிட்டால் சிறப்பு. மேலோட்டமான நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
திடீர் திடீரென்று உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கே பாதிப்பாக அமையலாம். உங்கள் நல்ல குணத்திற்கு விரைவில் எதிர்பார்த்த விஷயம் நடக்கும். ஆம், உங்கள் கிரக நிலைகளின் மாற்றத்தின்படி சாதகமான முடிவுகள் கைக்கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil