Today Rasi Palan, 5th September 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 5th September 2020: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 5, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களை முன்னரே அறிந்து அவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். மகிழ்ச்சியான நாள்
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
போட்டி, பந்தயங்களில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள். புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல்நலத்தில் கவனம் கொள்வீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
இளமை உணர்வுடன் இருப்பீர்கள். புதிய உத்திகள் தோன்றும், சுய திறமைகள் வெளிப்படும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
இன்னல்கள் அகலும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். விட்டுப்போன சொந்தங்கள் திரும்பிவரும். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். நேர்மையாக நடந்துகொள்வீர்கள். கனவுகள் நனவாகும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பாதுகாப்பு உணர்வுடன் செயல்படுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்கள் செய்ய தயங்கும் விசயங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருப்பதால் நிதானம் அவசியம்.நட்பு வட்டாரம் விரிவடையும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
மனஅழுத்தத்தால் அவதிப்படுவீர்கள். மன அமைதிக்கு தியானம் செய்ய வேண்டும். நேர்மறைத்தன்மையுடன் இருப்பதால் வெற்றி கிட்டும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்கும். வரும் காலம் வசந்த காலம் என்பதை உணர்வீர்கள்.மனவலிமை அதிகரிக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இலாபகரமான நாள். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். யதார்த்தத்தை உணர்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
திறமைகள் வெளிப்படும். பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். மற்றவர்களின் குறிப்பறிந்து செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
இரகசியங்களை பாதுகாப்பீர்கள். கனவுகள் நனவாக அதிக விலை கொடுக்க வேண்டி வரும்.நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.