Rasi Palan 6th August 2020: இன்றைய ராசிபலன்

Rasi Palan 6th august 2020 rasi palan today rasi palan - இன்றைய ராசிபலன்

By: Updated: August 6, 2020, 07:10:37 AM

Today Rasi Palan, 6th August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 6th August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 6, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். செய்வனவற்றை திருந்த செய்வீர்கள். நண்பர்களுக்காக தங்களது வழக்கமான நடைமுறைகளை மாற்றியமைப்பீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். புதிய விசயங்களில் நாட்டம் அதிகரிக்கும். நின்றுபோன விசயங்களை அதிக சிரத்தையுடன் நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

காரணமில்லாமல் காரியமில்லை என்பதை உணருவீர்கள். குழந்தைகளுக்காகவும் இளைய சகோதரர்களுக்காகவும் பொறுப்புகளை ஏற்பீர்கள். இளகிய மனதுடன் இருப்பீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ந்து மகிழ்விப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

பணிநிமித்தமாக திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஓய்வு நிலையை விரும்ப மாட்டீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

பணத்தின் அருமையை உணர்வீர்கள். பணமா பாசமா என்ற மனப்போராட்டத்தில் சிக்கி பாதிக்கப்படுவீர்கள். உணவு பழக்கவழக்கங்களில் கவனம் அவசியம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மற்றவர்களின் தலைமைக்கு கீழ்ப்படுவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி கிடைக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

புதிய விசயங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவீர்கள். வீட்டில் பாதுகாப்பு அம்சங்களை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

அதிகமாக சிந்தனை செய்வீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளதால், மனஅமைதிக்கு தியானம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும். பழைய நினைவுகளில் திளைப்பீர்கள்

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

பணியிடங்களில் அதிருப்தி நிலை நிலவும். ஓய்வு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மனசஞ்சலத்திற்கு ஆளாவீர்கள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிரத்தை எடுப்பீர்கள். புதிய விசயங்களுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த நாள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

கஷ்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 6th august

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X