Today Rasi Palan, 06th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong
Rasi Palan 06th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 06, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
எண்ணிய காரியங்கள் ஈடேறும். தனித்தன்மையுடன் செயல்பட்டு அரிய விஷயங்களையும் துரிதமாக முடிப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
எதிர்காலத்திற்கு தேவையான முடிவுகள் குறித்து சிந்திப்பீர்கள். சவால்களை சந்திக்க தயாராவீர்கள். கிரகங்கள் சாதகமாக இருப்பதால், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சுமூக உறவு தொடரும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதிநிலைமை குறித்த கவலை மேலோங்கும். மற்றவர்களுக்கு நாம் உதவி செய்தால், தக்க சமயத்தில் அவர்கள் நமக்கு உதவுவர் என்ற எண்ணம் ஏற்படும். அதிர்ஷ்டம் எப்போதும் கைகொடுக்காது என்பதை உணர்வீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மனக்கட்டுப்பாடு அவசியம். நீங்கள் நேர்மையாக இருந்தாலும், பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம், கவனம். தகுதிக்கு மீறிய செயல்களை தவிர்ப்பது நலம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதிலும் ஒட்டாத நிலை ஏற்படும். உங்கள் இலக்கை மட்டும் எட்ட முயற்சி செய்யுங்கள். வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தேவையற்ற ஆலோசனைகளை தவிர்ப்பது நலம். எதிலும் சமரசம் செய்துகொள்ளஇயலாத நிலை ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பர். பொறுமை காத்தல் நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால், மனமகிழ்ச்சி அடைவீர்கள். இதுவரை மனதில் வைத்து குழுமிக்கொண்டிருந்த விவகாரத்திற்கு அனுகூல தீர்வு கிடைக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நினைவில் கொள்வீர்கள். சுருங்க சொன்னால். உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
அபரிமிதமான நாள். கிரகங்கள் சாதகமாக இருப்பதால் எண்ணிய காரியங்கள் தங்குதடையின்றி ஈடேறும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் மனமகிழ்ச்சியடைவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நிதிநிலைமை சரியாக இல்லாததால், மனவருத்தம் அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். செய்யும் செயல்களில் தடங்கல்கள் உண்டாகும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பிறரின் உணர்வுகளை மதிப்பதால், உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்கள் துரிதமாக நடைபெறும். தனித்தன்மையால் கடினமான செயல்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். மன சஞ்சலத்தை தவிர்க்க வேண்டும். நிதானம் காப்பது அவசியம். விளைவுகளை அறியாமல் அகலக்கால் வைக்காமல் இருப்பது நலம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
புத்துணர்வுடன் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பீர்கள். மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.