மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
திடீர் அதிர்ஷ்டமும் பணவரவும் தேடி வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பேச்சில் ஒரு உற்சாகம் பிறக்கும். சின்ன தடைகள் ஏற்பட்டாலும் அதை கடந்து வருவீர்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
புதிய தொழில் வியாபாரங்களில் பண முதலீடு எதையும் செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்து போனால் சிறப்பு. வயிறு தொடர்பான நோய்கள் வரும் கவனம் தேவை. சேமிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
புத்தியில் குழப்பம் ஏற்படும். மாணவர்கள் உயர்கல்விக்கான படிப்பை தேர்வு செய்யும் முன்பு குழப்பம் இன்றி முடிவு செய்யுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்களின் யோசனையை கேட்பது நல்லது. சுமாரான நாள் இன்று.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. தைரியம் தன்னம்பிக்கை தேவை. குல தெய்வத்தை சரணடையுங்கள், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கலாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
நிம்மதியான நாள் இது. யாருக்காவும் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சரியான முடிவுகளை முன்னெடுத்துச் செல்வீர்கள். உங்கள் தலைமையிலான அணி எங்கு சென்றாலும் வெற்றி வாகை சூடும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் பொழுது, அதனை கெட்டியாக பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும். உங்களை நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்களின் அதீத திறமையை வெளிக்காட்ட வேண்டிய நேரம் இது. நீண்ட நாள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அதுவே உங்களை நிம்மதியாக வைத்திருக்கும். உடன் இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்கள் காமன் சென்ஸ் எந்தளவிற்கு சிறப்பாக வெளிப்படுகிறதோ, அந்தளவிற்கு பேரும், பெருமையும் உங்களை வந்துச் சேரும். இல்லையெனில், தவறான முடிவெடுத்து விட்டோமே என்று, இந்த வாரம் முழுவதும் புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்கள் வழியில் பயணித்தால் வெற்றி உறுதி. உங்கள் ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வையுங்கள். உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் பலம். அதுவே உங்களது வெற்றி.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுங்கள். உங்களது சில முயற்சிகள் தோல்வியில் முடியலாம். கடினமாக உழைத்தும் தோற்கும் போது தான், இந்த வாழ்க்கையே இப்படித் தான் என்ற சலிப்புத் தோன்றும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய நாள் இது. அது உங்கள் வாழ்வை மேன்மையாக்கும். தீயவை உங்கள் அருகில் கூட வராது.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
குடும்பத்தை விட்டு சில காலம் பிரிந்திருக்க எண்ணுவீர்கள். ஆனால், அப்பொழுதும் அவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஒற்றுமையாக சில விஷயங்கள் உங்களுக்கு இன்று நடக்கலாம்.