Advertisment

Rasi Palan 6th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 6th May Rasi Palan in Tamil: பிஸ்னஸ் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 6th May: இன்றைய ராசிபலன்

Rasi Palan 6th May: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 6th May 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 6th May 2019 : இன்றைய ராசி பலன், மே 6, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும் சூழல் உள்ளது. வருமானத்தில் சற்று சுணக்கம் ஏற்படும். பண விவகாரங்களில் ஒருமுறைக்கு பல முறை யோசித்து முடிவெடுங்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். பயனுள்ள நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பீர்கள். தெளிவான திசையில் அது இருக்கும். ஆனால், அவசரப்பட வேண்டாம். கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடாதீர்கள். உடல் ஆரோக்யத்தில் அக்கறை தேவை.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மன அழுத்தம் முற்றுப்பெறும். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் முடிவுகளில் மற்றவர்களை தலையிட அனுமதிக்க வேண்டாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

கடினமான வேலை செய்வதை விட, புத்திசாலித்தனமாக வேலை செய்வது எப்படி என்பதை இப்போது கற்று அறிந்திருப்பீர்கள். அது உங்களுக்கு பயன் தரும். எவ்வளவு உழைத்தாலும், உரிய பாராட்டு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். பாராட்டு இல்லையென்றாலும், தனிப்பட்ட உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் பெறும். கடவுள் வழிபாடு அவசியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சரியான திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் உங்களிடம் காணப்படும். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க செயலாற்றுவீர்கள். நீங்கள் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த பலனளிக்கும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கணினி பிரிவில் வேலை செய்வோருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் சேமிப்பு கணிசமாக உயரும். மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் ஏற்படும், வெற்றிகரமான நாள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்கள் பொறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்ற தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள். திருமண நிகழ்வு விரைவில் அரங்கேற வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாட்டுடன் இந்த நாளை தொடங்குங்கள். வெற்றி உறுதி.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பண வரவு சுமாராக இருக்கும். வசூலாகாத கடன் தொகை திரும்பக் கிடைக்கும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் கைக்கூடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சரியான நேரத்திற்காக காத்திருப்பீர்கள். அதற்கு இன்று மிகச் சரியான நாள். உங்கள் படைப்புகளை வெளிக்காட்டுங்கள். வெற்றி நிச்சயம். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு தான். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான நாள் இது.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

உடல் ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியேற, பெற்றோர்கள் துணை புரிவார்கள். திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

முடிந்த அளவு இன்று வாகனங்களில் செல்வதை தவிர்த்து விடுங்கள். கருத்து வேறுபாடு காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பிஸ்னஸ் செய்கிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில், குடும்ப உறுப்பினர்களிடம் கூட எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை பராமரிப்பில் பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுங்கள்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment