Advertisment

Rasi Palan 6th May 2020: இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan May 6th: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 6th May 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 6th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 6th May2020: இன்றைய ராசி பலன், மே 06, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

மற்றவர்கள் வந்து உதவுவார்கள் என்று காத்திருப்பது எந்த வகையிலும் உங்கள் முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது. கைப்பிடி அளவு முன்னேற்றம் வந்தால், கடலளவு சறுக்கல் வரும். இருப்பினும் நீந்திக் கொண்டே இருங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்களது பல நாள் திட்டம் இன்று நிறைவேற வாய்ப்புள்ளது. இது எப்படி சாத்தியமானது? என்று நீங்களே எண்ணி வியக்கும் அளவுக்கு முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதை உட்கார்ந்து ஆராய வேண்டாம்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

குடும்பத்தின் மீதான உங்கள் அக்கறை அதிகரிக்கும். உடல் உழைப்பு காரணமாக மனச்சோர்வு ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்கள் ஏற்படும்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

முக்கிய தருணத்தில் பெற்றோரின் அறிவுரையை எடுத்துக்கொள்ளவும். நட்பு வட்டம் விரிவடையும். பணியிடத்தில் உங்கள் கை ஓங்கியே இருக்கும். சரியான திசையில் செல்வீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம். மிக மிக எச்சரிக்கை தேவை.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

நீண்ட காலமாக வெளியில் சுற்றிக் கொண்டிருந்த உங்களது பணம் உங்கள் கைக்கே திரும்பி வரும். குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிறைய அனுபவ பாடங்களை கற்பீர்கள். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள். அனுபவத்தை ரசிக்க வேண்டிய காலக்கட்டம் இது.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

பண விரயம் ஏற்படும். இருப்பினும், கையைச் சுடும் அளவிற்கு சறுக்கல் இருக்காது. சமாளிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். அதேசமயம், மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம். கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்ளலாம்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

சாதுர்யமான பேச்சால் வெற்றியை வசப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். ஆளுமை செய்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

வியாபாரம் தேக்கம் அடையும் சூழல் உருவாகும். கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் அடுத்தக்கட்ட முடிவுகள் முடிந்தவரை மற்றவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment