Rasi Palan Today 6th November 2018 in Tamil : கேட்பதை வைத்து எதையும் நம்ப முடியாது. பார்ப்பதை வைத்தும் எதையும் நம்ப முடியாது. பேசுவதை வைத்தும் நம்ப முடியாது. அந்த இறைவன் ஒருவனே அனைத்திற்கும் காரணம். அவனே நம்பிக்கை. அவனை எல்லை.
Rasi Palan 6th November 2018 : இன்றைய ராசி பலன், 6 நவம்பர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் உபாதைகள் விலகும். கணினி துறையில் உங்கள் சாதனைகள் மேலோங்கும். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
அருகில் இருப்பவர்களை முற்றிலுமாக நம்ப வேண்டாம். பணம் கொடுக்கல், வாங்கலில் மனஸ்தாபம் ஏற்படும். பழைய பிரச்சனைகளை தோண்டி எடுத்து, உங்களுடன் மல்லுக்கட்ட சிலர் வருவார்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி செல்வோருக்கு வாய்ப்பு கைக்கூடும். அரசு பணிகளில் இருப்போருக்கு வரவு ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
தித்திப்பான நாள். பல நாள் கனவு இன்று நிஜமாக வாய்ப்புள்ளது. ஒன்சைட் காதல், இப்போது டபுள் சைடாக மாற அதிகம் வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்யோகம் சிறக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
இறைவன் வழிபாடு உங்களை மேலோங்க வைக்கும். காகத்திற்கு சாப்பாடு வைத்துவிட்டு இன்று சாப்பிடுங்கள். மூதாதையர்களின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
வேண்டாம் என்றால், இன்னல்கள் வந்து சேரும் நாள். குழந்தையில் ஆரோக்யத்தில் அதிக அக்கறை தேவை. வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மௌனமே இன்று உங்களை தற்காக்கும் ஆயுதமாகும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
குடும்ப உறவில் மாற்றம் உண்டாகும். விட்டு விலகியோர் உங்களை புரிந்து கொண்டு அவர்களாகவே மீண்டும் தொடர்பு கொள்வார்கள். யாரையும் குறைவாக எடைப் போட வேண்டாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
போராட்ட குணம் உங்களுக்கு இயற்கையில் இருக்கும். உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அது வந்து சேருவது கொஞ்சம் தாமதமாகலாம். கோயிலுக்கு சென்றால், பூசாரியின் காலில் விழுந்து வணங்குங்கள். பூர்வ பாவங்கள் கழியும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குழந்தை பாக்கியம் உண்டாகும். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மை உங்கள் பக்கமே. அனாவசிய பேச்சுகளை தவிர்த்து செயலில் கவனமாக இருங்கள். வெற்றி உறுதி.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)