Advertisment

Rasi Palan 6th october 2020 : இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்

author-image
WebDesk
New Update
Rasi Palan Today 6th october, இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 6th october, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 6th october 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan  6th october 2020: இன்றைய ராசி பலன், 6th அக்டோபர், 2020 :

மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 20) : உங்களது கூற்றுகளை திரும்ப பெறுவது மிகவும் கடினம். குடும்ப உறவுகள் மற்றும் சொந்தங்களிடம் அவசரப்பட்டு எதையும் பேச வேண்டாம். எண்ணங்களை நீங்கள் உங்களிடம் வைத்திருப்பது மிகவும் நல்லது.

ரிஷபம் (ஏப்ரல் 21 - மே 21) : செவ்வாயில் இருந்து வரும்  ஆற்றலை உங்களில் பலர் ஏற்கனவே அனுபவித்து வருகின்றீர்கள். அடுத்த ஐந்து வாரங்களில்,  உங்களது பிடிவாதமும், கோபமும் , மற்றவர்களின் நலன்களில்  எவ்விதத்திலும் பாதிப்பை எற்படுத்தாமல் இருக்க வேண்டும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : அடுத்த சில மாதங்களுக்கு, உங்களது வாழ்க்கையும், உணர்வுகளும் ஏற்கனவே, நடந்து முடிந்த நிகழ்வுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும்.  கடந்த மாதத்தில் நடந்த அனைத்தை நிகழ்வுகளையும்  நீங்கள் நன்கு புரிந்துகொண்டால், உங்களது  எதிர்காலம்  சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருள்.

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23 ) : உங்களிடம் அனைத்து சிறந்த யோசனைகளும் இருக்கலாம். ஆனால், உங்கள் போட்டியாளர்கள் உணர்வு ரீதியாக உங்களை தோற்கடிக்கக் கூடும். உண்மையில், உங்களின் பழைய தந்திரங்களை அவர்கள் உங்களுக்கு எதிராக  பயன்படுத்த முடியும். எனவே, அனைத்து வகையிலும் சுதாரிப்பாக இருக்க வேண்டும்.

சிம்மம் ( ஜூலை 24 – ஆகஸ்ட் 23 ): இந்த வார கிரக அமைப்பு  உங்களுக்கு அதிக நன்மைகளைத் தரும்.   கடின உழைப்பு மற்றும் சுய ஒழுக்கத்தையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23  ) :  உங்களை குழப்பும் அளவிற்கு ஏராளமான வாய்ப்புகள் வரும். நீங்கள் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் நிலை வரும். இதற்கு, முக்கிய  காரணம் உங்கள் கிரக அமைப்புகள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23 ) :  பலவகையான மனிதர்களை சந்தீப்பீர்கள். பல ஆண்டுகளாக நீங்கள் காணாத நபர்களும் உங்களது இல்லங்களைத் தேடி வருவார்கள். பல இனிமையான ஆச்சரிய நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்படும்.

விருச்சகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22 ) : அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு வீட்டு செலவீனங்கள் அதிகரித்து காணப்படும். ஒரு பொருளை வாங்குவது, விற்பது தொடர்பான முடிவுகளை எடுக்கும் முன்பு பல முறை பல முறை சிந்திக்க வேண்டும். உங்கள், எதிர்கால  திட்டங்களும் மாறும்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20 ): உங்களாது அன்றாட பணிகளில் அதிகம் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. பலதரப்பட்ட உணர்வுகள் உங்ககளை ஆட்கொள்ளும். உணர்வுகளை கட்டுபடுத்துவத்தில் வெற்றிக் கொள்வீர்கள். செயல்பாடுகள் அனைத்தும்  உங்களின் வலுவான உணர்வை எதிரொலிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20 ):  வாழ்க்கை வசப்படவில்லை   என்ற உங்களின் கருத்து மாற இருக்கிறது. வெற்றி உங்களை தேடி வருகிறது. இந்த மாற்றத்தை கண்டிப்பாக நீங்கள் உணர்வீர்கள். கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம் ( ஜனவரி 21 – பிப்ரவரி 19 ):  உங்கள் மனசாட்சியின் படி, உங்கள் கனவுகளை ஆராயத் தொடங்குவீர்கள். உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில், வெளி உலகத்தில் அல்ல, ஆழ்மனதில் தான் உள்ளது என்பதை அறிவீர்கள்.

மீனம் ( பிப்ரவரி 20 – மார்ச் 20 ): உங்கள் வாழ்கையை வழிநடத்துவது அடிப்படை சிந்தாந்ததமா? அல்லது  மேலோட்டமான வாழ்க்கை நிகழ்வுகளா? என்ற விவாதத்திற்கு பதில் தேட முயற்சி செய்வீர்கள். பலதரப்பட்ட சிக்கல்கள் மத்தியிலும், அமைதியைக் காணுவீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment