Today Rasi Palan, 7th February 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 7th February 2020: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 7, 2020 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
இன்றைய நாள்
Advertisment
Advertisement
ஜாதகம் ஒருவரது வாழ்வில் எவ்வாறு பணியாற்றுகிறது என்று யாரிடம் கேட்டாலும், அவர்களால் எப்போதுமே சரியான பதிலை தரமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை. மனித வாழ்க்கை - ஜாதகம் இவற்றிடையேயான உறவு, மனிதனுக்கும் புவிக்கும் இடையிலான உறவு போன்றது.
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...
பிரியமானவர் தவறான வழியில் செல்வது கண்டு எச்சரிக்கை செய்வீர்கள். பாதிப்பு இருவருக்குமே என்பதை அவருக்கு உணர்த்துவீர்கள். இழுபறியாக உள்ள விஷயங்களில் தீர்வு கிடைக்கும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
விருப்பப்பட்ட காரியங்களை செய்ய இயலாத நிலையால் மனசஞ்சலம் அடைவீர்கள். நண்பர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் சிறிது உற்சாகமடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
திட்டமிட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். கடின செயல்களை மேற்கொள்ள அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்காமல், சுயமாக சிந்தித்து பல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கிரகங்களின் சாதகமான பார்வையினால், எண்ணிய காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். மற்றவர்களின் உதவிக்கரம் தக்க சமயத்தில் கிடைக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வாகனபோக்குவரத்தில் கவனம் அவசியம்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். உங்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எதிர்கால வாழ்க்கைக்காக திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பீர்கள். எச்சரிக்கை உணர்வுடன் உங்கள் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களால் வெறுக்கத்தக்க வகையில் இருக்கும். எதிர்பார்த்த விஷயங்களில் முடிவுகள் சாதகமாக அமையும். கனவுத்தொல்லை உண்டு
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
நீண்ட தொலைவு பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். மற்றவர்களை தலைமையேற்று நடத்துவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்பதால் மனம் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
எதிர்பார்த்த இனங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பின்விளைவுகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவது நல்லது. பழைய அனுபவங்கள் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
மனதிடத்துடன் இருப்பீர்கள். வெற்றி கிடைக்கும்வரை போராடுவீர்கள். பலவிதங்களில் ஆதாயமடைவீர்கள். பிரியமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வழக்கமான பணிகளில் மாற்றம் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும். சிரிப்பே அருமருந்து என்பதை உணர்வீர்கள்.