Today Rasi Palan, 7th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 7th November 2019: இன்றைய ராசி பலன், நவம்பர் 7, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்த நீங்கள் மற்றவர்களுக்கும் வலியுறுத்துவீர்கள். எது தவறு எது சரி என்பதை உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பணியிடங்கள் மற்றும் தாங்கள் இருக்கும் இடங்களில், கிரகங்களின் சாதகமான பார்வையினால் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள், மகிழ்ச்சியான நாள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.முன்வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். கற்பனை வேறு, நடப்பு வேறு என்பதை உணர்வீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
நிதிவிவகாரங்களில் அதிக கவனம் அவசியம். பென்சன், சேமிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து நிதானித்து முடிவெடுப்பது நல்லது. பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
பிரியமானவர்களுக்காக அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள். உணவு நடைமுறையில் அதிக கவனம் கொள்வது நல்லது.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தேவையில்லாததை சிந்தித்தால் மனக்குழப்பம் தான் ஏற்படும் என்பதை உணர்வீர்கள். பின்விளைவுகளை உணர்ந்து முடிவெடுப்பது நல்லது. மகிழ்ச்சியான நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
நேராக நிற்கும் மரம் விரைவில் வெட்டப்படும். இதேபோல் தான் மனித வாழ்க்கையும். வளைந்து கொடுத்து வாழ்வதால் மட்டுமே வாழ்வு சிறக்கும் என்பதை உணர்வீர்கள். அந்நியர்கள் - பிரியமானவர்களிடையேயான பந்தத்தை நினைத்து குழப்பீக்கொள்வீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
எண்ணிய காரியங்கள் நிறைவேறும் பொருட்டு, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வரும். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.நிதிவிவகாரங்கள் மகிழ்ச்சி தரும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
உங்களது கருத்துகளுக்கு மற்றவர்கள் மதிப்பளிப்பார்கள். பொதுநலமாக இருப்பீர்கள். தொழில்சார்ந்த விசயங்களில் முன்னேற்றமான நிலை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பொது விசயங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டீர்கள்.பிரியமானவர்களுக்காக எதையும் செய்வீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
ஓய்வான நாள். எதிர்கால வாழ்க்கைக்காக பின்விளைவுகளை ஆராய்ந்து திட்டமிடுவீர்கள். தகவல்கள் சேகரிப்பில் அதீத அக்கறை காட்டுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
சுயமுன்னேற்றத்திற்காக நேரத்தை செலவிடுவீர்கள். மற்றவர்களுக்கு சிறப்பாக தெரியவேண்டுமென்று நினைத்து அதற்காக மெனக்கெடுவீர்கள்.