Rasi Palan 7th November 2020: இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

By: November 7, 2020, 7:03:40 AM

Rasi Palan 7th November 2020: இன்றைய ராசிபலன்:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக்கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 7th November 2020: இன்றைய ராசி பலன், அக்டோபர் 23, 2020:

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

ஜோதிடர்களுக்கு இரண்டு வகையான காலம் இருக்கிறது. காலத்திற்கு கிரேக்க சொற்களில் பெயரிடப்பட்டுள்ளது. முதலில் Chronos or clock time என்ற முறையில் நாம் காலத்தை அளவிடுகிறோம். அடுத்து காலத்திற்கு Kairos or qualitative time என்ற பயன்பாடு உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நாளின் தன்மையை நமக்கு சொல்கிறது. அந்த நாள் நல்லதா என்பதை திருமணத்திற்காகவோ அல்லது வேலைக்காகவோ சொல்கிறது. நாம் ஜாதகக் கணக்குகளை எழுதும்போது கைரோஸைப் பயன்படுத்துகிறோம்.

 

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) : இன்று அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தேவையற்ற ஏமாற்ற உணர்வுகளை தவிர்த்திடுங்கள்.உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். நச்சரிக்கும் வகையில் எதையும் கூறாதீர்கள். அவருடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) : காத்திருக்கும் பணிகளை தள்ளிப்போடாமல் உடனே செய்ய முயற்சி செய்யுங்கள். இது உங்களது நிதிநிலைமையை சரி செய்ய உதவும். இல்லையெனில், வீண் சங்கடங்கள் வந்து சேரும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : தேவை இல்லாத சிந்தனைகளை மூளைக்கு கொண்டு வராதீர்கள். நீங்கள் நீங்களாக இருந்தால், சில தடைகள் நீங்கலாக மகிழ்ச்சியாக இருக்கலாம்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :  உங்களது நேர்மையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். மற்றவர்கள் பல ஐடியாக்களை கொடுத்து உங்களை குழப்ப நேரிடும். கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் உறவுகளை பாதுகாப்பாக உணர வையுங்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) : சரியான விஷயத்தை நோக்கி முடிவெடுக்க சில சமயம் நீங்கள் கடினமான தருணங்களை சந்திக்க நேரிடும். இன்று சில சவால்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள். ஆனால், முடிவில் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : பெரியோர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குங்கள். அது உங்களை மேன்மையடைய வைக்கும். சுமங்கலி பூஜை நடத்தினால் திருமணமான பெண்களுக்கு பயன் அளிக்கும். வெளியாட்களை நம்ப வேண்டாம்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) : மகிழ்ச்சியான நாள். உறவினர்களின் ஆதரவு கிட்டும். பணியிடங்களில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் – மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) : ஏற்ற இறக்கங்களை நிதானமாக கையாளுங்கள். ஆளுமை திறன் உங்களிடம் உள்ளது. அதை பயன்படுத்தி வெற்றிப் பெறுவது எப்படி என யோசியுங்கள். உங்கள் திட்டங்கள் ஓரளவிற்கு வெற்றிப் பெறும் தினம் இன்று.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) : இன்று உங்களிடம் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து காணப்படும். இதனை தவிர்த்தல் அவசியம். உற்சாகமுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். பண வரவு சுமாராக இருக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது என்று புரிந்து கொண்டு சாதுர்யமாக செலவு செய்ய வேண்டும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) : உங்கள் பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். உங்கள் பணியில் உற்சாகத்தைக் காண்பீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாகவும் ஸ்திரமாகவும் இருக்கும். என்றாலும் பதட்டத்தை தவிர்க்க வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :  நிகழ் காலம் மிகவும் சவாலானதாக இருக்கும். அதுவே, சில வாய்ப்புகளை உங்களுக்கு அளிக்கும். மற்றவர்களின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும். அதாவது, சிறு சிறு விஷயங்களில் கூட, மற்றவர்களின் முடிவுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20):  வண்டி, வாகனங்களில் செல்கையில் கவனமுடன் இருத்தல் அவசியம். கிரகங்களின் பார்வை பலவீனமாக இருப்பதால், கடவுள் வழிபாடு நடத்திவிட்டு செயலைத் தொடங்குங்கள். வீரியம் குறையும்.

 

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Rasi palan 7th november 2020 morning rasipalan daily horoscope

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X