Today Rasi Palan, 7th october 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 7th october 2020: இன்றைய ராசி பலன், 7th அக்டோபர், 2020 :
மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 20) : தொழில் முறை வாழ்கையில் அதிக கவனம் செலுத்தீவீர்கள். இருப்பினும், உள்ளூர் மட்டத்திலான சமூக நலத் திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சமூக பொறுப்பை எடுத்துக் கொள்ள உள்ளூர் குழுவில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 - மே 21) : சட்ட ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ சிலவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கலாம். உங்கள், செயல்களை சிறப்பாக நிறைவேற்றுங்கள். எதிலும், நீங்கள் தோல்வியடைந்தால் அதற்கு முழுக் காரணமும் நீங்கள் தான்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) : இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதில் கவனம் செலுத்தாமல் தற்போதைய சூழலில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களது பொருளாதார நிலைமைகள் தொடர்ந்து நிலையானதாக இருக்க முயற்சி எடுங்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23 ) : கடந்த கால நிகழ்வுகளை எண்ணிப் பார்ப்பது மிகவும் சிறந்ததாக அமையும். சிறந்த நிகழ்காலத்திற்கான சாவி கடந்த காலத்தில் தான் உள்ளது.
சிம்மம் ( ஜூலை 24 – ஆகஸ்ட் 23 ): சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் இணக்கத்தைக் காண்பீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்கையில் முக்கிய இடத்தை அடைவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) : அதிர்ஷ்டம் உங்களுடன் பயணிக்க தொடங்கியுள்ளது. தினசரி நிகழ்வுகள் இயல்பாக நன்றாக அமையும். இருப்பினும், அனைத்து விசயங்களிலும் முன் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23 ) : உங்கள் விருப்பத்திற்குக் கீழ்ப்படியும்படி மற்றவர்களை கட்டாயப்படுத்தலாம். இருப்பினும், உங்களது அதிகாரம் எவ்வளவு தூரம் செல்லும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடன் இணக்கமாக இருக்கவே விரும்புவார்கள்.
விருச்சகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22 ) : நண்பர்களும், சக ஊழியர்களும் உங்களுடன் சகஜமாய் பழகும் வாய்ப்பை வழங்குவீர்கள். மற்றவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவீர்கள். மற்றவர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்க தயாராவீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20 ): பணம் சம்பாத்திப்பது என்பது முக்கிய குறிக்கோளாக இருந்தாலும், உங்கள் நண்பர்களுடன் சிறிது நேரம் உரையாட மனம் நாடும். சின்ன சின்ன தருணங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20 ): விசித்திரமான கனவுகள் உங்களை ஆட்கொள்ளும். நீங்கள் தெளிவற்ற குழப்பத்தில் இருக்கக்கூடும். உங்கள் ஆழ்நிலை மனது என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) : பொறுப்புகளை திறமையாக கையாள்வதில் தடைகள் காணப்படும். தீவிரமான எதிர்ப்புகளையும் சாதாரணமாக கடந்து செல்வீர்கள். குடும்ப உறவில் மீண்டும் நிம்மதி உருவாகும்.
மீனம் ( பிப்ரவரி 20 – மார்ச் 20 ): புதிய முயற்சிகளில் பங்கேற்பீர்கள். மகிழ்ச்சியான நாள். மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.