Today Rasi Palan, 08th January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Advertisment
Rasi Palan 08th January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 08, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
Advertisment
Advertisements
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
முக்கிய விஷயங்களில் மாற்றங்களை மேற்கொள்வீர்கள். புதிய இலக்குகளை நோக்கிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் நாள். விளைவுகளை முன்னரே அறிந்து முன்னெச்சரிக்கையாக இருப்பீர்கள். பழையகால அனுபவங்களிலிருந்து புதியனவற்றை கற்பீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நிதி விவகாரங்களில் திருப்திகரமான நிலை இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
மனசஞ்சலத்தால் பாதிப்படையும் நாள். பணியிடங்களில் விரோதப்போக்கு நிலவும். மனஅமைதிக்கு தியானம் மேற்கொள்ளவும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
இரகசியங்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் அவசியம். முடிவுகளை எடுப்பதில் தடுமாற்றம் நிகழும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
கிரகங்களின் சாதகமான பார்வையினால் நினைத்த காரியங்கள் எண்ணியபடி ஈடேறும். இரவுநேர பயணங்களில் அதிக கவனம் வேண்டும். மற்றவர்களை திருப்திபடுத்த அதிக சிரத்தை எடுத்துக்கொள்வீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
மனதில் குற்ற உணர்வு தோன்றி மறையும். ஏதோ ஒன்றை இழந்தது போன்று உணர்வீர்கள். வாகன போக்குவரத்தில் கவனம் அவசியம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
விவாதங்களில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். உணர்ச்சிகளுக்கு அதிக இடமளிக்காதீர்கள். பிரியமானவர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பல முயற்சிகளுக்கு பின்னரே காரியங்கள் தடையின்றி முடியும். மனசஞ்சலம் அதிகரிக்கும். அதிகம் உணர்ச்சிவசப்படுவதால், விரயங்களே அதிகரிக்கும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், கடும் வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது போட்டி, பந்தயங்களில் நேர விரயத்தை தவிர்ப்பது நல்லது. வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
அடுத்தது என்ன அடுத்தது என்ன என்பதை தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அதுகுறித்த ஆலோசனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவீர்கள். முழு திருப்தி ஏற்படாத நிலையால், மனம் சோர்வடைவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.