Today Rasi Palan, 8th July 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 8th July 2020: இன்றைய ராசி பலன், ஜுலை 8, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வர்த்தக விவகாரங்களில் ஏற்றம் பெறுவீர்கள். பணத்தை விட உறவுகள் மேலானது என்பதை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
பங்காளிகளினால் வளர்ச்சி பெறுவீர்கள். புதுப்புது விசயங்களை கற்பதில் அதீத ஆர்வம் காட்டுவீர்கள். அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று மனம் செல்லும்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
வழக்கமான பணிகளிலிருந்து விலகிச்செல்வீர்கள். அடுத்த 48 மணிநேரத்திற்குள் புதிய திருப்பங்கள் ஏற்படும். எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவீர்கள். இன்றைய வலிக்கு நாளை நிவாரணம் கிடைக்கும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
உங்களை புரிந்துகொள்ளாதவர்களால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். புதிய பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள். வார்த்தைகளில் கவனம் அவசியம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
மன உளைச்சலிருந்து விடுபடுவீர்கள். மனச்சோர்வு அடைய வாய்ப்பிருப்பதால் மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. விரைவில் நல்ல காலம் பிறக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். துயரம், கவலைகளை பகிர்ந்துகொள்வீர்கள். பிரச்னைகளை பகிர்வதனால் அது இரட்டிப்பாகும் என்று சிலர் சொல்ல கேட்பீர்கள். இருந்தாலும் அதை பரீட்சித்து பார்ப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். மற்றவர்களின் தலைமைக்கு கீழ்ப்படுவீர்கள். நிதி விவகாரங்களில் திருப்தி கிடைக்கும்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
புதிய விசயங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவீர்கள். வீட்டில் பாதுகாப்பு அம்சங்களை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
அதிகமாக சிந்தனை செய்வீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு உள்ளதால், மனஅமைதிக்கு தியானம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும். பழைய நினைவுகளில் திளைப்பீர்கள்
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பணியிடங்களில் அதிருப்தி நிலை நிலவும். ஓய்வு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மனசஞ்சலத்திற்கு ஆளாவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிரத்தை எடுப்பீர்கள். புதிய விசயங்களுக்காக தங்களை தயார்படுத்திக்கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த நாள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
கஷ்டங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வீர்கள். புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil