Advertisment

Rasi Palan 8th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 8th June Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 8th June: இன்றைய ராசிபலன்

Rasi Palan 8th June: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 8th June 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 8th June 2019 : இன்றைய ராசி பலன், ஜூன் 8, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

இன்றைய நாள் எப்படி?

பரவலாக இன்றைய நாள் காதலர்களுக்கு உகந்தது எனலாம். காதலின் தாய் இன்று அவர்களை ஆசிர்வதிக்கிறாள். ரொமாண்டிக் பிரியர்களுக்கு இதுபோன்றதொரு நாள் மீண்டும் கிடைக்காது. உங்கள் ராசியை பொறுத்து, இதன் பலன்களில் வேறுபாடுகள் இருக்கும்.

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

உங்களுக்கான இந்த நாளில் உங்கள் தாயை வணங்கினால் அதுவே போதுமானது. அந்த ஈடு இணையற்ற சக்தியின் வலிமை உங்களை உச்சிக்கு கொண்டு செல்லும். அவர் காலில் விழுந்து வெளியே செல்லுங்கள். உங்களை சீண்ட வெளியே ஒரு ஆளும் கிடையாது.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

விடா முயற்சி உங்களுக்கு இப்போது அவசியமாகிறது. உங்களுக்கான வாய்ப்பு உங்களை விட்டு இப்போது விலகிச் சென்றாலும், நிச்சயம் அது உங்களுக்காக விதிக்கப்பட்டவையே. ஆகையால் யார் என்ன சொன்னாலும், இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு களத்தில் இறங்குங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம் உங்கள் ராசி பலன் இம்ப்ரூவ் கண்டு வருகிறது. அதற்கு சாட்சி இன்றைய நாள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படவிருக்கிறது. எதற்கும் தயாராகலாம். கவிதை எழுதுவதை தூர வைத்துவிட்டு, போருக்கு தயாராகுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களின் தனிப்பட்ட குணாதிசயம் உங்களை பல தவறுகளில் இருந்து உங்களை காப்பாற்றும். உங்கள் துணையை ரொமான்டிக்காக மற்றும் அணுகாமல், அவருக்குள்ளும் மனம் இருக்கும் என்று நினைத்து செயல்படுங்கள். உங்களுக்கு இது சிரிப்பாக தோன்றினாலும், அதுவே உண்மை.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

உங்கள் முடிவுகளை நீங்களே சுதந்திரமாக எடுக்க வேண்டிய நேரமிது. அதுவே மறந்துவிடாதீர்கள். ஆனால், எல்லாவற்றையும் பெர்சனலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது உங்களை பல நேரங்களில் துன்பத்தில் வைத்திருக்கும். வழக்கத்தை விட பல சிக்கலான கேரக்டர்களை இனி வரும் நாட்களில் சந்திப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

உங்கள் கிரக நிலை அமைப்புகளால் பாதுகாப்பாக உணருவீர்கள். உங்கள் முடிவுகளை அருமையாக செதுக்கும் பக்குவம் ஏற்படும். உங்கள் பலம் அதிகரித்திருப்பது போன்று உணர்வீர்கள். ஆனால், உங்கள் முயற்சிக்கான நேரம் குறைவாகவே உள்ளது. எதையும் விரைந்து செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். முதலில் உங்கள் நிதி நிலையை சரி செய்யுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

அலுவலகங்களில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். உங்களின் பழக்கவழக்கங்களில் நீங்களே மாற்றத்தை காண்பீர்கள். குடும்பத்தினரும் உங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்வார்கள். அது உங்கள் நம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்கும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நிதி நிலைமையில் சில சறுக்கல்களை சந்திப்பீர்கள். ஆகையால் உங்கள் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்த முடியாமல் திணறுவீர்கள். இருப்பினும், இந்த நிலைமை விரைவில் மாறும். கணிசமான தோல்விகளுக்கு பிறகு ஏற்றத்தை காண்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

உங்கள் வயிற்றை விட, உங்கள் கண்கள் இப்போது அகலமாக விரியும். ஏனெனில், உங்களின் கற்பனை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து நிறைவேறும் போது, அதன் மகிழ்ச்சியான முடிவுகளை நீங்கள் சந்திக்க நேரும் தான். கடினமான பாதைகளை நீங்கள் கடந்து வந்து விட்டீர்கள். நோ டென்ஷன்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அப்போதே பிரதிபலனை அனுபவிப்பீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். விடாமல் உங்களை துரத்தும் சில சிக்கல்களுக்கும் அதுதான் காரணம் என்பதையும் மறக்க வேண்டாம். இருப்பினும், இன்று ஓரளவுக்கு நிம்மதியான நாள்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

வாவ்..வாவ்.... உங்களுக்கான நல்ல செய்திகள், அனுகூலமான தருணங்கள் உங்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றன. மகிழ்ச்சியை கொண்டாட தாமதம் வேண்டாம். உங்கள் நிமிடங்களை இனி நீங்களே அதிகாரம் செய்யலாம். யாரும் அதில் உள் நுழைய வேண்டாம்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

காரிய காரணங்கள் இல்லை உங்கள் தோல்விக்கு. கிரக நிலைகளே அதற்கு காரணம். சரியான விடைகளை தேர்ந்தெடுக்க வேண்டுமெனில், அதற்காக மேலும் சில நாட்களுக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும், இறுதியில் வெற்றி உங்களுக்கே.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment