Advertisment

Rasi Palan 8th october 2020 : இன்றைய ராசிபலன்

உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்

author-image
WebDesk
New Update
Rasi Palan 8th october 2020 : இன்றைய ராசிபலன்

Rasi Palan 8th october 2020 : இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 8th october 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan  8th october 2020: இன்றைய ராசி பலன், 8th அக்டோபர், 2020 :

மேஷம் (மார்ச் 21 - ஏப்ரல் 20) : உங்களுக்கு நல்ல காலம் வந்துவிட்டது என்றே சொல்லலாம்.  உங்களிடம் சில பெரிய யோசனைகள் இருந்தால், மற்றவர்களிடம் அதை  சொல்ல முயற்சியுங்கள். எதிர்பாராத வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷபம் (ஏப்ரல் 21 - மே 21) : உங்கள் வெற்றியை உறுதி செய்வதற்கான கால நேரம் வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். கடைசி நேரத்தில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் குறித்து முன்னேற திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உங்களின் நேரம் விலை மதிப்பற்றது. அதை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21) : உங்கள் கனவுகள் மற்றும் லட்சியங்களை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எவ்வாறாயினும், உங்கள் நிதி நிலைமையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.

கடகம் (ஜூன் 22  – ஜூலை  23 ) : உங்கள்  வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். தகவல்களை கேட்டுப் பெறுங்கள். பேசி தீர்க்க வேண்டிய விசயங்களை அடையாளம் காணுங்கள்.

சிம்மம் ( ஜூலை 24 – ஆகஸ்ட் 23 ): அடுத்த பதினெட்டு மாதங்களில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும்  நிகழ்வுகள் தொடங்க ஆரம்பித்துள்ளன. சில, அற்ப நிகழ்வுகள் கூட, உங்களை எதிர்காலத்தை வளமையாக்கும். எனவே,  தயவுசெய்து அதிர்ஷ்டத்தின் பேச்சை கேட்க தொடங்குகள்.

கன்னி (ஆகஸ்ட் 24  – செப்டம்பர் 23  ) : பணியிடங்களில் மனக் கசப்புகள் உருவாகும். போராட்ட குணம் அதிகரிக்கும்.  உங்கள் உரிமையை எளிதாக விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆதரவு அதிகரிக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23 ) : கடந்த கால  பெருமைகளை மீட்டெடுக்க அநேக வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கையின் மிக உயரிய, ஆழமான  முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கப்படுவீர்கள். முடிவுகள் வெற்றியைக் கொண்டு வரும்.

விருச்சகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22 ) :  ஓடுவதற்கு முன்   முதலில் நடக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பழமொழி உங்களுக்கு மிகவும் பொருத்தமாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியாக பேசிப் பழகுங்கள். உங்கள் மனதில் உள்ள அழுக்குகள் தூக்கி எரிந்து விட்டு, மற்றவர்களின் மாண்புகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 20 ): நீங்கள் தேர்வு செய்த முடிவுகள் மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் அவற்றின் ஒட்டுமொத்த விளைவு, வரவிருக்கும் காலங்களில் மிகுந்த தாக்கங்களை உருவாக்கும் என்பதை மனதில் தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விசயங்களை தொடர்ந்து செய்வதில்  சில சிக்கல்கள் எழலாம். எனவே, சில தற்காலிக தாமதங்கள் அதிக மனநிறைவைத் தரும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20 ):  நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு போன்ற காரணங்களுக்காக நீங்கள் போற்றப்படுவீர்கள். எந்த சூழ்நிலையிலும், உண்மையை மட்டும் பின் தொடர்வீர்கள். உங்களின் உள்மனதை பிறர் புரிந்து கொள்ளும் சூழல் உருவாகும்.

கும்பம் ( ஜனவரி 21 – பிப்ரவரி 19 ): மகிழச்சியாக இருப்பீர்கள்  . நடப்பது அனைத்தும்  நல்லதாக நடக்கும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளக் கூடும். அன்றாட நிகழ்வுகளில் தலையிட வேண்டுமா? என்பதை நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

மீனம் ( பிப்ரவரி 20 – மார்ச் 20 ):  அதிகப் படியான செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவீர்கள். மாற்று சிந்தனைகளையும், கருத்துக்களையும் ஏற்கும் பக்குவம் கிடைக்கும். உங்களால் மற்றவர்ள் பலனடைவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil     

Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment