Advertisment

Rasi Palan 9th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan in Tamil 9th December 2019: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasi Palan 9th December 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan 9th December 2019: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 9th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 9th December 2019: இன்றைய ராசி பலன், டிசம்பர் 9, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

புது முயற்சிகளை உத்வேகத்துடன் துவங்குவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். எதிர்கால தேவைகள் நிறைவேறும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கிரகங்களின் பார்வைகள் சாதகமாக உள்ளன. மனம் விரும்பிய நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள், மகிழ்ச்சியான நாள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

எதிர்காலம் மற்றும் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுவீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

நடைமுறை சிக்கல்களை கடந்து வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை நிறைவேறும். தாமதங்களை கண்டு மனம் துவளாமல் இருந்தாலே, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதிரடி சாகசங்களை செய்து மற்றவர்களை தன்பக்கம் ஈர்ப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கிரகங்களின் சாதகமான பார்வையினால் நினைத்ததை முடிப்பீர்கள். வீட்டு உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளால் மனசஞ்சலம் அடைவீர்கள். செய்த தவறுகளுக்காக மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டீர்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

சிறிய விசயங்களும் மனசஞ்சலம் ஏற்படுத்தும் என்பதால், அதிக விழிப்புணர்வு அவசியம். காத்திருந்தால் அனைத்தும் கனியாகும் என்பதை உணர்வீர்கள். எண்ணியது ஒன்று நடப்பது இன்னொன்று ஆக உள்ளதே என மனம் வருந்துவீர்கள். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

கேட்ட உதவிகள் காலம் கடந்து கிடைக்கும். மாற்றுக்கருத்து உடையவர்களிடம் வார்த்தைகளில் நிதானம் காப்பது அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

பணியிடம் மற்றும் தொழில்சார்ந்த விவகாரங்களில் வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. உங்களின் கருத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடந்த கால அனுபவங்கள் தற்போது உதவும். மகிழ்ச்சியான நாள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

கிரகங்களின் சாதகமான பார்வை இடம்மாறுவதால் செய்யும் காரியங்களில் நேர்த்தி குறையும். மனசஞ்சலத்துடன் இருப்பதால் எதிலும் மனம்ஒட்டா நிலை ஏற்படும். உணவு விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

மற்றவர்கள் தங்களை புரிந்துகொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தங்களின் கோரிக்கைகளை மற்றவர்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளதால், அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. மன அமைதிக்கு தியானம் செய்யவும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

மற்றவர்களிடம் குறைகாண்பது எளிது. அதை நிவர்த்தி செய்வது கடினம் என்பதை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விரைவில் வெற்றி பெறுவோம் என்ன தன்னம்பிக்கை ஏற்படும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment